Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Underworld: Blood Wars (3D) (Tamil) Watch Trailer
Jothidam
ambedkar_NN_Banner
Home >> Trichy >> சனி பெயர்ச்சி பலன்கள் - 2014>> ரிஷபம் சனி பெயர்ச்சி பலன்கள் - 2014

ரிஷபம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

Sani Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • ரிஷபம்

  • நட்சத்திரம்
  • :
  • கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசி
  • அதிஷ்ட கல்
  • :
  • வைரம்
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • வெள்ளை
  • அதிஷ்ட எண்
  • :
  • 1, 4, 8
  • அதிஷ்ட திசை
  • :
  • கிழக்கு
உழைப்பால் உயரும் நீங்கள், அடுத்தவர் நிழலில் அமர யோசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து எதிலும் முன்னேற்றத்தை தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். 7-வது வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனி வருகிறாரே? என்று பதட்டப்படாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நன்மையே உண்டாகும். இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.

செவ்வாயின் வீட்டில் பகை பெற்று சனி உலவுவது சிறப்பாகாது. கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். கூட்டாளிகளால்

பிரச்னைகள் உண்டாகும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விழிப்புத் தேவை.  நண்பர்கள், உறவினர்கள்; அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரால் அனுகூலமிராது. மாறாக சங்கடங்கள் உண்டாகும். பிறரிடம் சுமுகமாகப் பழகினால் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். உங்கள் நலனிலும், வாழ்க்கைத்துணைவரது நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தூக்கம் கெடும். கனவு தொல்லை தரும். கெட்டவர்களின் சகவாசத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. ஆயுள் பற்றிய பயம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களுக்கு எதிர்ப்பாக செயல்படுவார்கள். பக்குவமாகச் சமாளிக்கவும்.

தந்தையால் நலமே உண்டாகும். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். அதனால் மன அமைதியும்தெளிவும் பெறுவீர்கள். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் சிலஇடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். உடல் சோர்வு ஏற்படும். எடுத்த காரியம் தாமதமாகி, பின்பு நல்லவிதமாக நிறைவேறும். சிலருக்கு பகுதி நேரத் தொழில் அமைந்து, அதன் மூலம் வருமானம் கிடைக்கும். சனி யோக காரகனாகி 7-ல் இருப்பதால், ஜாதகப்படி யோகபலம் உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் திருமணம் ஆகும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் அளவோடு நலம் தரும்.