Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> சனி பெயர்ச்சி பலன்கள் - 2014>> துலாம் சனி பெயர்ச்சி பலன்கள் - 2014

துலாம்-சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

Sani Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • துலாம்

  • நட்சத்திரம்
  • :
  • சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
  • அதிஷ்ட கல்
  • :
  • வைரம்
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • கருப்பு
  • அதிஷ்ட எண்
  • :
  • 1, 5, 8
  • அதிஷ்ட திசை
  • :
  • கிழக்கு
நல்லது செய்தவர்க்கும் நல்லதே செய்யும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களை வெடித்து சிதற வைத்தார். எப்போதும் பிரச்னையிலேயே மூழ்கி கிடந்தீர்களே! இப்படி உங்களை வாட்டி வதைத்த சனிபகவான் இப்பொழுது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2-ம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை நீங்கும்.
உடல் நலம் சீராகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் பண வரவும் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். பூர்விகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதனால் நலமும் உண்டாகும். சனி பகை வீட்டில் உலவுவதால் எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். அவர்களால் அதிகம் தொல்லைகள் இராது.
வாழ்க்கைத்துணைவராலும் கூட்டாளிகளாலும் சங்கடம் உண்டாகும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. தந்தை நலம்  பாதிக்கும். தந்தைக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இளைய சகோதர, சகோதரிகளால் செலவுகள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் கிடைக்கும்.
புதிய முயற்சிகள் கைகூடும். ஏழரைச் சனியின் கடைசிக்காலமிது என்பதாலும் சனி யோகாதிபதி என்பதாலும் 13-7-2015 வரை குரு சனியைப் பார்ப்பதாலும், அதன்பிறகு குரு 11-ஆமிடம் மாறுவதாலும் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண்பீர்கள். முகப்பொலிவு கூடும். நல்லவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆகியோரால் நலம் பெறுவீர்கள். நீண்ட நாளைய எண்ணங்கள் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் ஈடேறும்.
பொதுவில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் பொருளாதார நிலையில் உயர்வை ஏற்படுத்தும் எனச் சொல்லலாம்.