Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Pa. Paandi Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> கன்னி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

கன்னி: 100/60 எதிரிகளால் பிரச்னை!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
கடமை உணர்வு மிக்க கன்னி ராசி அன்பர்களே!

இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான துலாமில் இருந்து குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், திருட்டு சம்பவத்தையும் ஏற்படுத்தி இருப்பார். இனி அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. அதாவது ராகு உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம்.ராகுக்கு நேர் எதிரே இருக்கும் கேது, இதுவரை 8-ம் இடமான மேஷத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7-ம் இடமான மீனத்திற்கு வந்திருக்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும்போது மனைவி வகையில் பிரச்னைகளையும், அலைச்சலையும் தரலாம். மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். உடல் நலம் சுமாராக இருக்கும்.ராகு-கேது சாதகமாக இல்லையே என்பதற்காக கவலை கொள்ள வேண்டாம். இதனால் ஏற்படும் தடைகள், பிற்போக்கான நிலையை குரு பார்வையால் முறியடிக்கலாம். அதன்மூலம் பணம், பொருள் விரயம் தடுக்கப்படும். வீண்விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தாரிடம் மதிப்பு கூடும்.குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம். உறவினர்கள் வகையில் சில  பிரச்னைகள் வரத்தான் செய்யும். சற்று விலகி இருப்பது நல்லது. வீடு-மனை வாங்க சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கேதுவால் சிற்சில உடல்நலபாதிப்புகள் வந்தாலும் மருத்துவத்தின் பேரில் மறைந்துவிடும்.

பரிகாரம் : புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள பேரையூர் நாகநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.