Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> ரிஷபம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

ரிஷபம்: 100/75 முயற்சியில் வெற்றி!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
திட்டமிட்டு செயல்படும்ரிஷப ராசி அன்பர்களே!

ராகு இதுவரை 6-ம் இடமான துலாமில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உடல் ஆரோக்கியம், செயலில் வெற்றியை வழங்கிக் கொண் டிருந்தார். தற்போது ராகு 5-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால், குடும்பத்தில் பிரச்னை உருவாக இடமுண்டு. அவ்வப்போது இனம் புரியாத வேதனை மனதை ஆட்டிப் படைக்கலாம். அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். 12-ம் இடமான மேஷத்தில் இருந்து பொருள் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவர், இப்போது 11-ம் இடமான மீனத்திற்கு சென்று நல்ல வளம், உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்ப வாழ்வில் மேன்மையைக் கொடுப்பார். எடுத்த புது முயற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் வழங்குவார். கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. கையில் எப்போதும் பணப்புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். முயற்சியில் இருந்த தடையனைத்தும் விலகும். பகைவர்களின் தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்படும் துணிச்சலைப் பெறுவீர்கள். எனவே எடுத்த எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். 2014 டிசம்பருக்கு பிறகு சனிபகவான் சாதகமற்ற இடத்திற்கு செல்வதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அன்றாடத் தேவை அனைத்தும் எளிதில் நிறைவேறும். கணவன், மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருப்பது அவசியம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பும் சரிவர கிடைக்காது. அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சிறப்படையும். மருத்துவச் செலவு பெருமளவில் குறையும். நீண்ட காலமாக சிகிச்சை பெறுபவர்கள் கூட தற்போது வீடு திரும்புவர்.

பரிகாரம்: சென்னை - குன்றத்தூர் தலத்தில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.