Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Atti Watch Trailer
Jothidam
ambedkar_NN_Banner
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> விருச்சிகம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

விருச்சிகள்: 100/75 ஏழரையிலும் நன்மை!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • விருச்சிகம்

  • நட்சத்திரம்
  • :
  • விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
  • அதிஷ்ட கல்
  • :
  • பவளம்
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • வெளிர் மஞ்சள்
  • அதிஷ்ட எண்
  • :
  • 1, 2, 3
  • அதிஷ்ட திசை
  • :
  • தெற்கு
கண்ணியம் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே!

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடமான துலாமில் இருந்ததால் பண இழப்பையும், சில துயர சம்பவங்களையும் சந்தித்திருக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளும் ஏற்பட்டு இருக்கும். இனி இந்த இடர்பாடுகளுக்கு விடை கொடுக்கலாம். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னி ராசிக்கு செல்வது மிகச்சிறப்பானது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். உபரியாகக் கிடைக்கும் பணத்தைச் சேமிப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பணமுடையில் இருந்து பாதுகாப்பு தரும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.ராகு நன்மை தந்தாலும் கேதுவால் நன்மை கிடைக்காது. அவர் இதுவரை 6ம் இடமான மேஷத்தில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். இப்போது 5-ம் இடமான மீனத்திற்கு வந்துள்ளதால் அரசு வகையில் சில பிரச்னைகளைத் தரலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். ராகு, குருவால் தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் : நாகப்பட்டினத்தில் அருளும் காயாரோகணேஸ்வரரையும், நீலாயதாட்சியையும் தரிசித்து வாருங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.