Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Engitta Modhathey Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> மீனம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

மீனம்: 100/75 கெட்டதிலும் நன்மை!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
நல்லதை மட்டுமே நினைக்கும் மீன ராசி அன்பர்களே!

ராகு இதுவரை 8ம் இடமான துலாமில் இருந்து முயற்சியில் தடையையும், குடும்பத்தில் பிரிவையும் ஏற்படுத்தியிருப்பார். உறவினர்கள் வகையிலும் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகி இருக்கும். இப்போது ராகு 7-ம் இடமான கன்னி ராசிக்கு மாறியுள்ளார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இங்கு அலுவல் காரணமாக நீண்ட துõர இடத்துக்கு இடப்பெயர்ச்சியையும், தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப் பெயரையும் சந்திக்க நேரலாம். கேது இதுவரை 2ம் இடமான மேஷத்தில் இருந்து பகைவர்களால் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார். அரசின் கெடுபிடியால் சிற்சில இன்னலுக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்த நிலையில் கேது இப்போது உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், பழைய கெடுபலன்கள் இனி இருக்காது. அவர் செயல்களில் தடையையும், உடல்உபாதையையும் தரலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட வாய்ப்பு உண்டு. எனவே முன் பின் தெரியாதவர்களிடம் எதையும்ஒப்படைக்க வேண்டாம்.எனினும், இவ்வளவு கெட்டதிலும் நன்மை என்ற வகையில், குருவின் ஸ்தானபலம், 9ம் பார்வை பலம் ஆகியவை கெடுபலன்களை முறியடித்து நன்மையையே தரும்.

பரிகாரம் : கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் அருளும் ராகு பகவானை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.