Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aramm Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> துலாம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

துலாம்: 100/65 வரவும் செலவும் சரி!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
பிரச்னைகளைத் துணிச்சலுடன் சமாளிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்க உள்ளது. அதுவும் தற்போது கேது மிகமிக நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். அவர் இதுவரை 7-ம் இடமான மேஷத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உடல் உபாதைகளையும் தந்திருப்பார். இப்போது 6-ம் இடமான மீனத்திற்கு வந்திருப்பதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.கேது நன்மை தரும் அளவுக்கு ராகுவால் நற்பலனை தர இயலாது. அவர் இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம்மாறி 12-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், துõரதேச பயணத்தையும், இடமாற்றத்தையும் கொடுப்பார். கேது தரும் பொருள் வளத்திற்கேற்ப இவர் செலவைக் கொடுத்து விடுவார்.கேது சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளைத் தருவார். இதன் மூலம் நீங்கள் எடுத்த செயல் வெற்றிகரமாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம். வீடு, மனை வாங்க சிற்சில தடைகளை மீறித்தான் அனுகூலம் பிறக்கும்.

பரிகாரம் : கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருப்பாம்புரம் பாம்புரநாதரை தரிசித்து வாருங்கள். ஏழையின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.