Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Vikram Vedha Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> சிம்மம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

சிம்மம்: 100/55 சிரமமான சூழ்நிலை

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
வெற்றி மேல் வெற்றி குவிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அதாவது காரிய அனுகூலத்தையும், நல்ல வருவாயையும் தந்திருப்பார். அதன் மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கண்டிருக்கலாம். பல்வேறு முன்னேற்றத்தையும் பெற்றிருக்கலாம். இப்படி நன்மை தந்த ராகு, இப்போது 2-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், துõரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். ராகுவுக்கு இணையான இன்னொரு கிரகம் கேது இதுவரை 9-ம் இடமான மேஷத்தில் இருந்து வந்தார். அவரால் பொருள் இழப்பையும், காரியத்தில் தோல்வியையும் கண்டிருக்கலாம். அவர் இப்போது 8-ம் இடத்திற்கு மாறுவதன் மூலம் இந்த கெடுபலன்கள் நடக்காது. அதேநேரம் அவர் மீனத்திற்கு மாறுவதும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண், தோல், தொடர்பான நோய் வரலாம். சற்று கவனம் தேவை. லேசான பாதிப்பு வந்தால்கூட உடனே சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் மருத்துவ செலவு குறையும்.

பரிகாரம் : நாகூர் தலத்தில் அருளும் நாகநாதரை தரிசித்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவி செய்யுங்கள்.