Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Achcham Yenbadhu Madamaiyada Watch Trailer
Jothidam
ambedkar_NN_Banner
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> மிதுனம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

மிதுனம்: 100/65 உடல்நலனில் கவனம்!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • மிதுனம்

  • நட்சத்திரம்
  • :
  • மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, ப
  • அதிஷ்ட கல்
  • :
  • மரகதம்
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • பச்சை
  • அதிஷ்ட எண்
  • :
  • 5, 6, 8
  • அதிஷ்ட திசை
  • :
  • வடகிழக்கு
செயல்திறத்துடன் பணியாற்றும் மிதுனராசி அன்பர்களே!

இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்காது என்றாலும் இந்த காலம் உங்கள் வாழ்வைத் தழைக்கச் செய்யும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ராகு இதுவரை 5-ம் இடமான துலாமில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4-ம் இடமான கன்னி ராசிக்கு வந்து விட்டதால் அந்த பிரச்னை நீங்கும். அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் வீண் அலைச்சல், பணவிரயம் போன்றவை உருவாகலாம். நிழல் கிரகமான கேது இது வரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மேஷத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார். அவர் இப்போது 10-ம் இடமான மீனத்திற்கு சென்றுள்ளார். இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளைத் தரலாம். ஆனால் கேது பிற்பகுதியில் செயல் வெற்றியைக் கொடுப்பார். குடும்பத்தின் நிலையில் மேம்பாடு உண்டாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது. எனவே சற்று கவனமாக இருக்கவும். உடல் நலம் சுமாராகவே இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

பரிகாரம் : நாகர்கோவில் தலத்தில் அருள்பாலிக்கும் நாகராஜாவை தரிசித்து விட்டு வாருங்கள். கோயில் உழவாரப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.