Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sri Venkateswara - Trichy Kattappava Kanom Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> மகரம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

மகரம்: 100/80 ஆன்மிக யோகம்!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
சமுதாயத்தில் மதிப்பு மிக்க மகர ராசி அன்பர்களே!

இதுவரை இந்த 2 கிரகங்களும் திருப்தியற்ற நிலையில்தான் இருந்தன. அதாவது ராகு 10-ம் இடமான துலாமில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார். இப்போது 9-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுவார். இது சிறப்பான இடம் இல்லை என்றாலும், பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. ஆனால், செயல்பாடுகளில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். கேது 4-ம் வீடான மேஷத்தில் இருந்து உடல் உபாதைகளையும், பிள்ளைகளால் தொல்லைகளையும் தந்திருக்கலாம். இந்தபிரச்னைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். அதேநேரம், கேது 3-ம் இடமான மீனத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறைஅருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். கேதுவின் பலத்தால் தெய்வ
அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும்,  சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும்  கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பிள்ளைகள் நலம் மேம்படும்.குடும்பத்தில் குதுõகலம் இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பூசல்கள், கருத்துவேறுபாடு மறையும். கோயில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையும் கிடைக்கப் பெறுவீர்கள். புத்தாடை அணிகலன்கள் வந்து சேரும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டி வரலாம்.

பரிகாரம் : கும்பகோணம் - திருவாரூர் பாதையிலுள்ள நன்னிலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள். சுமை தூக்கும்  தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.