Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> கடகம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

கடகம்: 100/70 குடும்ப மகிழ்ச்சி!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
மதிநுட்பத்துடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

இது வரை ராகு 4-ம் இடமான துலாமில் இருந்து இருந்து வீண் கலகம், அலைச்சலை உருவாக்கி இருப்பார். இப்போது ராகு 3-ம் இடமான கன்னி ராசிக்கு வருவதால் நன்மையை வாரி வழங்குவார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார். கேது இதுவரை 10-ம் இடமான மேஷத்தில் இருந்து உடல் உபாதை தந்திருப்பார். இனி அவர் 9-ம் இடமான மீனத்திற்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்ல. இருந்தாலும், உடல் உபாதை நீங்கி ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு, காரிய தோல்வி உண்டாகலாம். ராகுவால் செயல் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். கேதுவால் வரும் தடைகளை குருவின் பார்வையால் முறியடிக்கலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குருவின் பார்வை கைகொடுக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த திருட்டு பயம் அடியோடு மறையும். விருந்து, விழா என் சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நோய்நொடி அனைத்தும் நீங்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து வந்த பயணப்பீதி மறையும்.

பரிகாரம் : மன்னார்குடிக்கு அருகேஉள்ள பாமணி நாகநாதரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.