Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Kaththi Sandai Watch Trailer
Jothidam
Vallabhbhai
Home >> Trichy >> ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014>> கும்பம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 2014

கும்பம்: 100/50 வாகன யோகம்!

rahu ketu Peyarchi Palan  - 2014
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :
நல்ல மனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

இதுவரை ராகு 9-ம் இடமான துலாமில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி இருந்தார். எதிரிகளின் வகையில் இருந்து இடையூறு வந்திருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளையும், உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம்.
ராகுவுக்கு நேர் எதிரே பயணிக்கும் கிரகமான கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். எடுத்த காரியங்களில் வெற்றியையும் தந்திருக்கலாம். பொருளாதார வளமும் அவரால் மேம்பட்டிருக்கும். இப்போது இடம்மாறி 2ம் இடமான மீனத்திற்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து போகவும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.  வாகன யோகம் ஏற்படும். வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். கண் தொடர்பான உபாதைகள் வரலாம்.

பரிகாரம் : நாகை மாவட்டம், பூம்புகாருக்கு அருகேயுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் தலத்தில் அருளும் கேது பகவானை தரிசித்து வாருங்கள்.  ரத்த தானம் செய்யுங்கள்.