Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aval Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> குரு பெயர்ச்சி பலன்கள் - 2017>> மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் - 2017

குரு பெயர்ச்சி பலன்கள் (02/09/2017 முதல் 11/10/2018 வரை) - மேஷம்

Guru Peyarchi Palan  - 2016
  • ராசி
  • :
  • நட்சத்திரம்
  • :
  • அதிஷ்ட கல்
  • :
  • அதிஷ்ட வண்ணம்
  • :
  • அதிஷ்ட எண்
  • :
  • அதிஷ்ட திசை
  • :

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட எதையும் துணிந்து தைரியமாக செய்து

எதிலும் முதன்மை பெற வேண்டும் என்று துடிக்கும் மேஷராசி அன்பர்களே

 தன்னம்பிக்கையும், மன உறுதியும் விடாமுயற்சியும் உடைய மேஷ ராசிக்காராகிய உங்களுக்கு குரு கிரகம் உங்கள் ராசிக்கு 7 - ஆம் ராசியாகிய துலாமில் 02/09/2017  முதல்   11/10/2018 வரை சஞ்சாரம் செய்கிறார்.

 இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஓரளவுக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

கைவிட்டுப்போன பொருள், பணம், எல்லாம் திரும்ப கிடைக்கும்.

 திருமண காரியம் சிறப்பாக நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள்

மேன்மை ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. புதிய வாகன சேர்க்கை ஏற்படும். கூட்டு தொழில் செய்வோர் நிதானத்துடனும், பொறுமையை கையாள வேண்டும்.

 கல்வியை பொறுத்தவரையில் பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்

உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை. தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும்.

 குரு பார்வை ஏற்படுத்தும் நன்மை

குரு பகவான் தனது 5 ,7,9  ஆம் பார்வையால் உங்கள் ராசியின் 11,1 , மற்றும் 3

 ஆம் இடங்களை பார்வை செய்கிறார்.

 11  - ஆம் இடத்தை பார்ப்பதால் உங்களின் ஆசைகள் இந்த வருடத்தில் நிறைவேறும்.  நினைத்ததில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத லாபம், காரிய வெற்றி உண்டு.

 1 - ஆம் இடத்தை பார்ப்பதால் இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகி குரு பார்க்க

கோடி நன்மை என்ற வார்த்தைக்கு ஏற்ப நீங்கள் நல்ல சிந்தனை தெளிவு பெற்று

எதையும் சிறப்பாக செய்வீர்கள். உங்கள் ராசியை குரு 7  -  ஆம் பார்வை மூலம்

பார்ப்பதால் சகல நன்மையை நீங்கள் பெற போகிறீர்கள்.

 3 - ஆம் இடத்தை தனது 9 - ஆம் பார்வையால் பார்ப்பதால் தைரியம் பெருகும்.

பதவி தேடிவரும் தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர,

சகோதரிகளின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். இசைத்துறையில் தொழில் செய்வோர் சிறப்படைவார்கள்.

 குரு அஸ்தமனம் அடையும் காலம்

 14 .10 .2017  முதல் 12 .11.2017 வரை குரு கிரகம் அஸ்தமனம் அடைகிறது.

இக்கால கட்டத்தில் எதையும் நிதானத்துடன் கவனமாக செய்பது நன்மை அளிக்கும்.

 குரு வக்கிரம் அடையும் காலம்

10.03.2018 முதல் 08.07.2018 வரை குரு கிரகம் வக்கிரம் அடைகின்றது.

 இந்த குரு பெயர்ச்சியின் மூலம் நீங்கள் போன வருடம் பட்ட கஷ்டங்களில்

இருந்து நல்ல ஒரு எதிர்காலத்தை பெறப் போகிறீர்கள். குரு உங்கள் சமசப்தம

பார்வையால் பார்ப்பதால் அனைத்து கஷ்டங்களில் இருந்து விடுபட்டு சகல

சம்பத்துக்களையும் நீங்கள் பெறப்போகிறீர்கள். நல்ல முன்னேற்றம் நிச்சயம்.

 1 . உத்யோகஸ்தர்கள்

      உங்களை பொறுத்தவரை மிக சரியான காலமாகும். பதவி, உயர்வு, பெயர், புகழ்

 கிடைக்கப் பெறுவீர்கள். கல்வி துறையில் பணி செய்பவர்கள் நன்மை உண்டு பணி இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

 2 . வியாபாரிகள்

சிறப்பாக காலம், பெருமளவில் பணப்புழக்கம் ஏற்படும். இதுவரை

இருந்து வந்த கடன் அடைபடும். பெரிய அளவில் லாபம் கிடைக்கப் பெரும். போன

வருடம் பட்ட கஷ்டம் தீர்ந்து புது தெம்பு பெறுவீர்கள். சொந்த தொழில்

செய்வோர் சரியான சமூகமான சூழல் உருவாகும்.

 3 . விவசாயிகள்

 உங்களை பொறுத்தவரை இந்த ஆண்டு முன்னேற்றம் நிறைந்ததாக அமையும். போட்ட முதலீடு கிரட்டிப்பாகும். வங்கி கடன் எதிர் பார்த்திருந்தால் எளிதில் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். கால்நடை வளம் பெறும். நகைகளை மீட்கும் காலம்.

 4 . கலைஞர்கள்


கலைஞர்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை, கெளரவம் கிடைக்க கூடிய

காலம். விளம்பர கம்பெனி நடத்துபவர்களுக்கு வாய்ப்பு அதிகம் ஏற்படும். அரசு

விருது, சன்மானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

 5 . பெண்கள்

 பெண்களை பொறுத்தவரை மிக உயரமான கால கட்டம். வேலைக்கு செல்லும்

பெண்களுக்கு கெளரவம் கிடைக்கும். திருமண தடை விலகும். குழந்தை பேறு

உண்டாகும் வீண் அலைச்சலை மட்டும் தவிர்க்கவும். பெண் குழந்தைகளை பொறுத்தவரை சுப விரையம் ஏற்படும்.

 மாணவ - மாணவிகள்

 கல்வி வகையில் இந்த வருடம் சிறப்பு ஏற்படும். குரு உங்கள் ராசியை

பார்ப்பதால் நல்ல கல்வி ஞானம் ஏற்படும். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.

நேரத்தை கண் போல கருதி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

 பரிகாரங்கள்

 வியாழன் அன்று பன்னீர், இளநீர்