Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Saithan Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ஜேசுதாஸ் வழிபாடு

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ஜேசுதாஸ் வழிபாடுசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தமிழ் நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் எனும் சிற்றூரில் உள்ளது. இந்தக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்கு பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறும்.
இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளித் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய திருவிழா நாட்களாகும். இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். மேலும் தமிழ் ஆங்கிலப்புத்தாண்டு நாட்கள், ஆடி 18 ம் பெருக்கு புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகையில் தீபத்திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதேசி, தைப் பொங்கல், தைப்பூசம், மாசியில் சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் ஆலயம் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
இந்தக்கோயில் வார நாட்களில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடை திறந்து இருக்கும். மற்ற நாட்களில் இத்திருக்கோயில் கதவடைக்கப்பட்டிருக்கும். இதேபோல் தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகின்றது. இந்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தை மாதத்தின் கடைசி வெள்ளியான இன்று மதுரகாளிக்கு மஹா அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகச்சியில் பிரபல திரைப்பட பாடகர் ஜேசுதாஸ் தனது மனைவி பிரபாவுடன் பங்கேற்று இறைவனை வணங்கினார்.
பாடகர் ஜேசுதாஸ் வருகையை அறிந்த ரசிகர்கள் சிறுவாச்சூர் நோக்கி படையெடுத்தனர். ரசிகர்களுக்கு முகமலர்ச்சியுடன் கைகொடுத்து விடைபெற்றார் ஜேசுதாஸ்.

  Source : justknow.in
Post Date : 06-02-15
Total Visitors : 36
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments