Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சியில் அழகுமுத்துக்கோன் 261 குருபூஜை விழா: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

திருச்சியில் அழகுமுத்துக்கோன் 261 குருபூஜை விழா: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதைதிருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீசீனிவாசா மஹாலில் பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் 261-வது குருபூஜை விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ். வளர்மதி உள்ளிட்ட அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கட்சி தலைவர் பாரதராஜா, பொதுச்செயலாளர் உ.ஆறுமுகசாமி, துணைத்தலைவர் ஆறுகோனார் ஆகியோர் தலைமை ஏற்றனர். தென்மண்டல இளைஞரணி தலைவர் ஜி.எஸ்.ராஜ்குமார், புதுகை மாவட்ட தலைவர் வே.செல்வம், ஐ.டி.விங் தலைவர் எல்.ஏ.நிர்மல்குமார், சிவகங்கை மாவட்ட பொருளார் சுரேஷ், தஞ்சை மாவட்ட தலைவர் என பலரும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் அமைப்புச்செயலாளரும் முன்னாள் அரசு கொரடாவுமான ஆர்.மனோகரன் வீரன் அழகு முத்துக்கோன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அழகு முத்துக்கோனை நினைவுகூர்ந்து விடுதலைப்போரில் யாதவ சமுதாயத்தின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்தக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.தொட்டியம்.ராஜசேகரன், வழக்கறிஞர் சிந்தை.சரவணன், மாநகர மாவட்ட அவைத் தலைவர் சாத்தனுர் ராமலிங்கம், பத்திரிகையாளர் ஆர்.ஜி.ரெத்தினகுமார், பாரத முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், ஜங்சன் பகுதி செயலாளர் தனசிங், அன்பில் தர்மதுரை, எடத்தெரு கணேஷ், ராமு, பிரகாஷ், வெங்கடாஜலம், மார்க்கெட் நவாஸ், அம்பிகாபுரம் மகாலிங்கம் உள்பட பாமுகவின் நிர்வாகிகள் மற்றும் திருச்சியில் உள்ள யாதவர்களின் சங்கங்களை சேர்ந்த பலரும் திரளாக கலந்துக்கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் பிற்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பார்த்தீபன், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில் அறங்கவலர் குழு முன்னாள் தலைவர் பொறியாளர் வெங்கடாசலம், மக்கள் நீதிமய்யம் வழக்கறிஞர் பிரிவை சார்ந்த எஸ்.ஆர்.கிஷோர்குமார், தமிழ்நாடு புதுச்சேரி யாதவ சங்கள்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.திருவேங்கடம் யாதவ் ஆகியயோரும் மாவீரருக்கு மரியாதை செய்து வணங்கினர்.
மேலும் விழா பேரூரையாக, யாதவர் ஒருங்கிணைப்பு பேரவை ஆர்.கே.வெங்கடாசலம், காங்கிரஸ் சிவாஜி சண்முகம்,ஐக்கிய ஜனதாதளம் ஹேமநாதன்,அதிமுக நிர்வாகிகள் ரெ.சந்திரன்,திமுக வட்ட செயலாளர் ஜி என்கின்ற கோவிந்தராஜ்,டி.ஆர்.சிவக்குமார், மகளிரணி பாரதிகுமார், முன்னாள் கவுன்சிலர் புரு.கிருஷ்ணகுமார் அ.ம.மு.க.நிர்வாகிகள் வழக்கறிஞர் சரவணன், வெங்காயமண்டி எஸ்.கணேஷ், ஆர் கிருஷ்ணன், பிஜேபி எஸ்.பி.பார்த்தசாரதி, வழக்கறிஞர்கள் டி.கேசவன், கோவிந்தராஜ், வீர யாதவர் இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகி எம்.சி.பழனிசாமி, எஸ்.சுப்பிரமணியன், எஸ்.வி.ஆர்.சீனிவாசன், பொன்மகள் என்.கண்ணன், விஜயராகவன், ஆர்.பாலாஜி. சி.முத்தையன் ஆகியோர் உரையாற்றினர்
சிறப்பு விருந்தினர்களாக எடத்தெரு ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் டிரஸ்டிகள் வி.ஆர்.என். சேதுராமன். எம்.பி,கோபாலகிருஷ்ணன், என்.பார்த்திபன் ஆட்டுக்காரத்தெரு,மஞ்சனக்காரத்தெரு யாதவர் சங்க தலைவர் பழனிவேல்,செயலாளர் ரவியாதவ், சமஸ்பிரான் தெரு யாதவர் சங்க தலைவர் டி.தங்கராஜ், முகுந்தன், கோபாலகிருஷ்ணன், கண்ணன், சந்திரமோகன், கோகுல மக்கள் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், வி.கோபால், ஏ.சி.ஆறுமுகம், ஜெ.மூர்த்தி, சேகர், காளீஸ்வரன், டி.செந்தில்குமார், முனியப்பன், பிரவின் யாதவ், பொன்மலை யாதவர் சங்க நிர்வாகிகள் இளவரசு யாதவ், ஆசைத்தம்பி யாதவ், நடிகர் பரணி நற்பணி மன்ற நிர்வாகிகள் தினேஷ், ராஜ்குமார், தமிழ்செல்வம் சென்னை கண்ணன், ராஜேஷ் யாதவ், ராஜபாளையயம் மாரிதுரை பி.ஹெச் எல் யாதவர் சங்க தலைவர் ஏ.நேரு, செயலாளர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர்
விழாவுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட துணைதலைவர் சி.ஜெயபால், கருப்பையா, இலுப்பூர் ரமேஷ், செனையக்குடி முருகேஷ்,தஞ்சை இடையாத்தி வினோத், சிவகங்கை சுரேஷ், இராமநாதபுரம் வினோத், விக்னேஷ்வரன், ஈஸ்வரன், பொருளாளர் எம்.பெரியசாமி, பி.நாகலிங்கம் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முடிவில் மாநில நிர்வாகி ஆர்.முருகானந்தம் நன்றி கூறினார்,

  Source : justknow.in
Post Date : 12-07-18
Total Visitors : 123
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments