Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Annabelle Creation (English) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சியில் ஆரோக்கியம் நல்வாழ்வு குறித்து பேலியோ கருத்தரங்கு

திருச்சியில் ஆரோக்கியம் நல்வாழ்வு குறித்து பேலியோ கருத்தரங்குதிருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன் மஹாலில் திருச்சி லயன்ஸ் சங்கம் மற்றும் பேலியோ குழுவினரின் ஆரோக்கியம் & நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் மற்றும் பேலியோ மருத்துவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு துவங்கிய இந்த கலந்துரையாடலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்துக்கொண்ட மருத்துவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உடலை கட்டுக்குள் வைத்துக்கொள்வது குறித்து கருத்துரை வழங்கினார்கள்
இந்நிகழ்ச்சியில் பேலியோ குழும நிர்வாகிகள் சங்கர் ஜி மற்றும் மனோஜ் விஜயகுமார், எம்.பி.ஆர். குரூப் பார்கவி ராஜா, கண்மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
டாக்டர் பரூக் அப்துல்லா மற்றும் டாக்டர் தயானந்த் சக்கரவர்த்தி உணவு முறையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளித்ததோடு, இரத்த பரிசோதனை செய்து வந்தவர்களுக்கு டயட் சார்ட் கொடுத்து உடல் பருமனை குறைக்க ஆலோசனை வழங்கினர்.
பேலியோ உணவு முறையில் நீரிழிவு இரத்த அழுத்தம் மற்றும் ஆட்டோ இம்யூன் வியாதிகள் குணமாகி வருவதாகவும், கடந்த 6 மாதங்களாக பேலியோ உணவு முறைகளை கடைபிடித்ததால் 150 கிலோ எடையை 80 கிலோ எடையாக குறைத்ததாக அங்கு வந்திருந்த நடராஜ் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் தெரிவித்தனர்.
முன்னதாக பொறியாளர் இலட்சுமி காந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியில் பிருந்தா ஆனந்த் நன்றி கூறினார்.

  Source : justknow.in
Post Date : 19-06-17
Total Visitors : 261
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments