Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Taramani Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தில்லை நகர் மக்கள் மன்றத்தில் புத்தக திருவிழா கலெக்டர் துவக்கி வைப்பு

தில்லை நகர் மக்கள் மன்றத்தில் புத்தக திருவிழா கலெக்டர் துவக்கி வைப்பு   பபாசி வழிகாட்டுதலில் திருச்சி லேண்ட்மார்க் எக்ஸ்போ நடத்தும் புத்தகத் திருவிழாவை திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி குத்துவிளக்கேற்றி புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து தண்ணீர் அமைப்பு சார்பில் சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய 10 நூல்களை மாவட்ட கலெக்டர் வெளியிட்டு புத்தகங்களை வாசிப்பதினால் கிடைக்கும் பலன்கள் குறித்து பேசினார்.
சூழலியல் நூல் அறிமுக நிகழ்ச்சிக் தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.சேகரன் தலைமை தாங்கினார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் , பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் முனைவர் மணிமேகலை, தண்ணீர் அமைப்பின் பொருளாளர் சிவகுருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
தனது 10 நூல்களையும் விளக்கி சிறப்புரை கோவை சதாசிவம் ஆற்றினார் .
அதில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள சுற்றுச் சூழல் மன்றம் , பசுமைப் படைகள் ஆக்கப் பூர்வமாக செயல்பட வேண்டும், ஏனெனில் இயற்கை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது பெயரளவிலேயே உள்ளன. குறிப்பாக, சுற்றுச்சூழல் அமைப்புகள் , சமூக அமைப்புகளின் செயல்பாடுகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் , பெண்கள் ஈடுபாடுடன் பங்கேற்க வேண்டும் .அப்போதுதான் இயற்கையையும் | சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் . மேலும் பறவைகள் யானைகள், போன்றவை களைப் பற்றி கூறினார் .
முன்னதாக புத்தகத் திருவிழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நா.ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார். முடிவில் தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் கி.சதீஸ்குமார் நன்றி கூறினார்.

  Source : justknow.in
Post Date : 19-06-17
Total Visitors : 79
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments