Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Annabelle Creation (Tamil) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சி பேலியோ சந்திப்பில் விதவிதமான ஸ்டால்கள்

திருச்சி பேலியோ சந்திப்பில் விதவிதமான ஸ்டால்கள்உலகளவில் தற்போது பேலியோ டயட் பார்முலா வெகுவாக பரவி வருகின்றது. கடந்த காலக்கட்டங்களில் தானியம், சர்க்கரை அற்ற இந்த உணவை உண்ட வரை மக்களுக்கு டயபடிஸ்(நீரிழிவு), பிளட்பிரஷர், மாரடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, -ஹைப்போதய்ராய்டிசம், காக்கை வலிப்பு, சொரியாசிஸ், விடில்கோ (வெண்திட்டுக்கள்), கான்சர் முதலான நகர்ப்புற மனிதனின் வியாதிகள் இல்லை. தற்போதைய காலக்கட்டங்களில் தானிய உணவுகளையும் ஜங்க் புட்களையும் உண்ட பின்னரே உடல் பருமன், தைராய்டு, நீரிழிவு இவ்வியாதிகள் மனிதரை தொற்றிக்கொண்டது.
இப்படிப்பட்ட நோய்களில் இருந்து விடுபடவும் ஆரோக்கியமான நல்வாழ்வினை பெற்றிடவும் தற்போது பேலியோ எனும் உணவுப் பழக்கவழக்கம் வெகுவாக வளர்ந்து வருகின்றது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ நினைத்தால், தினமும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் ஏதேனும் ஒரு ஆரோக்கிய பானத்தைப் பருகி வர வேண்டும்.
முன்பெல்லாம், நம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தது. அதனால் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, அதன் காரணமாக பல்வேறு நோய்கள் வேகமாக உடலைத் தாக்குகின்றன.
உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்பு பெற்றிடவும் பேலியோ டயட் மனிதர்களிடையே அதிகமாக கவர்ந்திழுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் திருச்சி ரோஷன் மஹாலில் திருச்சி பேலியோ சந்திப்பு நேற்று நடைபெற்றது. விதவிதமான ஆரோக்கியமான உணவு வகைகள் பரிமாறப்பட்டது. அதேபோல் ஸ்டால்களில் ஆரோக்கியமான நல்வாழ்வு குறித்த குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்கள், நெய், டயட் மற்றும் விட்டமின் மாத்திரைகள், எம்.பி.ஆர்.குழுமத்தின் வறுக்கப்பட்ட பாதாம் பருப்பு வகைகள், காபி ஷாப் உள்ளிட்ட பல்வேறு ஸ்டால்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.
நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் இலவச அனுமதியுடன் எம்.பி.ஆர்.குழுமத்தில் இருந்து வெளிவரும் செவன் குடிநீர் பாட்டில் விநியோகமும் வழங்கப்பட்டது.

  Source : justknow.in
Post Date : 19-06-17
Total Visitors : 110
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments