Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்லூரி நிறுவனர் நாள் விழா உற்சாகம்

ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்லூரி நிறுவனர் நாள் விழா உற்சாகம்திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் நாள் விழா நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமையில் தாங்கினார். இந்தியன் அபாகஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பஷீர் அஹமது, துபாய் A.M.Z இண்டகிரேட்டட் ஃபார்மிங் சிஸ்டத்தைச் சேர்ந்த ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்குக் கல்லூரியின் தலைவர் ஜமால் முஹமது பிலால், செயலர் மற்றும் தாளாளர் டாக்டர். ஏ.கே. காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி. எம்.ஜே. ஜமால் முஹம்மது, துணைச்செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி நிறுவனர் நாள் விழாவிற்கான மலரைக் கோவை பாரதியார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார்.
கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர். ஏ.கே. காஜா நஜிமுத்தீன் விழா மலரின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு மைய நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். பொருளாளர் ஹாஜி. எம்.ஜே. ஜமால் முஹம்மது முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
பின்னர், “சமமான கொடைக்கு ஜமால் என்று பேர்” என்ற தலைப்பில், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி முனைவர் தி.மு.அப்துல் காதர் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. பிற்பகல் நிகழ்விற்கு, அய்யம்பேட்டை, அஞ்சுமன் அறிவக நிறுவனர் ஹாஜி. டி.எம். ஜபருல்லாஹ் முன்னிலை வகித்தார்.
கல்லூரி நிறுவனர்களின் சிறப்பு அஞ்சல் தலையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரும், மேனாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் வெளியிட, மேனாள் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் முதல் அஞ்சல் தலையைப் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், கல்லூரியின் நீங்கா நினைவலைகளைச் சிறப்பு விருந்தினர்கள் பதிவு செய்தனர். மேலும், கல்லூரியின் வளர்ச்சி, வரலாற்றுச் செய்திகள் பற்றியும், நினைவுகூரத்தக்கவுள்ள அறிஞர்கள், சீரிய பணிகள், சமுதாயத் தொண்டுகள், சினிமா, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை உள்ளிட்ட பல்துறைகளில் கால்பதித்த இம்மண்ணின் மைந்தர்கள், வித்தகர்கள் மற்றும் அரசியல் நுட்பவியலாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறை உயர் அதிகாரிகளை நினைவுகூர்ந்தனர்.
முன்னதாக முற்பகல் நிகழ்விற்கு துணை முதல்வர் முனைவர் முஹம்மது இப்ராஹிம் , பிற்பகல் நிகழ்விற்கு கூடுதல் துணை முதல்வர் முனைவர் முஹம்மது சிஹாபுதீன் ஆகியோர் நன்றி கூறினர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இயக்குநர்கள், விழா குழுவினர் மற்றும் இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வுமைய உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 13-07-18
Total Visitors : 37
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments