ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி போட்டியிடப் போகிறார். இதை அவரே அறிவித்துள்ளார். இதுவரை நான் நான்கு முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். வருகிற ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலிலும் நான் சுயேச்சையாக போட்டியிடப் போகிறேன் என்று கூறியுள்ளார் ராமசாமி.
ஜனவரி 23-ம் தேதி தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளாராம். சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி, பல பொது நல வழக்குகள் போட்டு அரசியல் மட்டத்திலும், பிற மட்டத்திலும் பெரும் புயலைக் கிளப்பியவர் ஆவார். கட்டாய ஹெல்மட் உத்தரவு வரக் காரணமே இவர்தான். அதேபோல ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கொதித்தெழுவார். அதிமுக ஆட்சிக்கு எதிராக இவர் போட்ட வழக்குகள் பல. பெரும்பாலான வழக்குகளில் இவர் வென்றுள்ளார். வக்கீலாக இல்லை என்றாலும் கூட கோர்ட்டுகளில் திறம்பட பேசக் கூடிய திறமை படைத்தவர்.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் இவரும் போட்டியிட வருவதால், அங்கு நடைபெறும் தேர்தல் விதிமுறைகளுக்கு நிச்சயம் பெரும் திருப்புமுனையை இவர் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தமுறை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களம் பரபரப்பாகவே பேசப்படலாம்...
Invite People To Here