Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Star Theatre - Trichy Kadhal Kasakuthaiya Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருவள்ளுவர் தினம்-குடியரசு தினத்தில் மதுக்கடை-பார்களுக்கு லீவு - கலெக்டர்

திருவள்ளுவர் தினம்-குடியரசு தினத்தில் மதுக்கடை-பார்களுக்கு லீவு - கலெக்டர்திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;
வருகின்ற 15.01.2017 ஞாயிற்றுக் கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2017 வியாழன்க்கிழமை குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3யு, பார்களிலும் மதுபானம் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நாட்களில் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Source : justknow.in
Post Date : 12-01-17
Total Visitors : 44
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments