Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Achcham Yenbadhu Madamaiyada Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி - கனிமொழி நலம் விசாரிப்பு

திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி -  கனிமொழி நலம் விசாரிப்புதிருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவனை நேற்று திமுக பிரசாரத்திற்கு வந்த கனிமொழி சந்தித்து நலம் விசாரித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு திரும்பும்போது வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேரம் என்பதால் பிரசாரத்திற்கு வந்து கட்சியின் முன்னணியினரும், நிர்வாகிகள் பலரும் திருமாவளவனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று பிரசாரத்திற்கு வந்த கனிமொழி எம்.பி.,யும் திருமாவளவனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள கீதாஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  Source : justknow.in
Post Date : 08-02-15
Total Visitors : 53
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments