Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Maaveeran Kittu Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  முதல்வர் ஓ.பி.எஸ்., திருச்சியில் தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை

முதல்வர் ஓ.பி.எஸ்., திருச்சியில் தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் நேற்றிரவு திருச்சி வந்தடைந்தார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்புப் பணிகளில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடியாக ஈடுபடமாட்டார்கள் என்ற கருத்து தொடக்கம் முதலே நிலவியது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நேற்றிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். இரவு சுமார் 9.40 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முதல்வர் பன்னீர் செல்வம் கோயில் நிகழ்ச்சியை தவிர்த்து விட்டு கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணி குறித்த ஆலோசனையில் தற்போது ஃபெமினா ஹோட்டலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனைகளை முடித்து விட்டு பிரச்சாரம் ஏதும் செய்யாமல் மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்லவிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

  Source : justknow.in
Post Date : 07-02-15
Total Visitors : 12
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments