Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Achcham Yenbadhu Madamaiyada Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  இந்தாண்டின் முதல் பேரவை கூட்டம் வரும் 17-ம் தேதி கூடுகிறது

இந்தாண்டின் முதல் பேரவை கூட்டம் வரும் 17-ம் தேதி கூடுகிறதுஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில் மாநில கவர்னர் ரோசய்யா உரையாற்றுவார்.
இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் நேற்று வெளியிட்டார். அந்த அறிவிப்பில், வரும் 17-ம் தேதியன்று சட்டப் பேரவைக் கூட்டத்தை பேரவை மண்டபத்தில் ஆளுநர் கே.ரோசய்யா கூட்டியிருப்பதாகவும், அன்றைய தினமே அவர் உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரையாற்றியதும், அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும். இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறும். முன்னதாக, கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்கும். இந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் பேரவை தொடங்கும் நாளான்றோ (பிப். 17) அல்லது அதற்கு முன்பாகவே நடைபெற வாய்ப்பிருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறலாம் என்று தெரிகிறது.
சட்டப் பேரவையில் பல முக்கியப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் எனத் தெரிகிறது. டெங்கு காய்ச்சல், ராணிப்பேட்டை உயிரிழப்புச் சம்பவம், சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் உள்பட பல முக்கிய விஷயங்களை பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு அரசின் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், ஜி.கே.வாசன் கட்சியில் இணைந்துள்ள என்.ஆர்.ரங்கராஜன், ஜாண் ஜேக்கப் ஆகிய எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் பேரவையில் தனித்துச் செயல்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் பேரவைத் தலைவரிடம் அளிக்கவில்லை.
மேலும், காங்கிரஸ் கட்சியின் பேரவை துணைத் தலைவர், கொறடா பதவிகளுக்கு பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் நியமிக்கபடுவதாக அந்தக் கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால், பதவிகளை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதுவரை எந்தக் கடிதமும் வரவில்லை எனவும் பேரவைச் செயலகம் தெரிவிக்கிறது. அது தொடர்பான கடிதம் வரப்பெற்றவுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இப்போது கூட்டப்பட்டுள்ள கூட்டத் தொடர், 14-வது சட்டப் பேரவையின் 10-வது கூட்டமாகும். ஏற்கெனவே 9-வது கூட்டத் தொடர் ஆளுநரால் முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 10-வது கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. அதற்கு மறுநாளான 17-ம் தேதி பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இதனால், பேரவைக் கூட்டத் தொடர் விவாதங்களில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பான பேச்சுகள் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல முக்கிய பிரச்னைகள், இடைத் தேர்தல் குறித்த விவாதம் என பெரும் பரபரப்புகளுக்கு இந்தக் கூட்டத் தொடரில் பஞ்சம்இருக்காது.

  Source : justknow.in
Post Date : 07-02-15
Total Visitors : 9
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments