Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Saithan Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பா.ஜனதா பிரமுகர் மீது தாக்குதல்: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

பா.ஜனதா பிரமுகர் மீது தாக்குதல்: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் அரங்கேற்றிய தாக்குதலை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டிருப்பதாவது;–
பாரதீய ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முத்துராமன் நாகர்கோவிலில் பட்டப்பகலில் கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி வெட்டப்பட்டுள்ளார். கொடூரமான இந்தக் கொலை வெறித்தாக்குதலுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் மீதும் மற்ற இந்து அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் மீதும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியதாகவுள்ளது. இனிமேலும் இத்தகைய தாக்குதல்களை நடைபெறா வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக மேற்கொண்டு குற்றவாளிகள் எந்தப்பிரிவின், எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும் உடனே கைது செய்ய வேண்டும்.
இல்லையென்றால் பாரதீய ஜனதா கட்சி நாகர்கோவிலில் மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்திருப்பது போல, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்த வேண்டியதிருக்கும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

  Source : justknow.in
Post Date : 09-02-15
Total Visitors : 11
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments