Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Maanagaram Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்ட அமைச்சர்கள்; வீடுகள் கிடைக்காததால் அவதி

ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்ட அமைச்சர்கள்; வீடுகள் கிடைக்காததால் அவதிவயலூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்த அமைச்சர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுவினர் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களைத் தேடி தொகுதிக்குள் முகாமிட்டனர். பலருக்கு வீடுகள் கிடைக்காததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிக வாடகைக்கு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிலர் மந்திரிகளுக்கு வீடுகள் கொடுப்பதற்கு அச்சப்படுகின்றனர்.
அந்தந்தப் பகுதியிலேயே வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ள அவர்களில் பலர் தங்களுக்கான சமையலர், உதவியாளரையும் உடன் அழைத்து வந்துள்ளனர். பலருக்கு வீடுகள் கிடைக்காததால் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.
இரவே அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணி குறித்து கலந்துரையாடியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர்களுக்கு வழிகாட்டுவதற்காக அந்தப் பகுதி அதிமுகவினருடன் மாநகர் மாவட்ட நிர்வாகி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Source : justknow.in
Post Date : 24-01-15
Total Visitors : 22
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments