Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Achcham Yenbadhu Madamaiyada Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; டிராபிக் ராமசாமி - கல்லூரி மாணவர் மனுத்தாக்கல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; டிராபிக் ராமசாமி - கல்லூரி மாணவர் மனுத்தாக்கல்ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் தவிர்த்து, சுயேட்சையாகவும் பல பிரபலமான புதுமுகங்கள் களமிறங்கி உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பதவி இழந்ததை அடுத்து நடக்கும் இந்த இடைத்தேர்தல் களத்தில் கல்லூரி மாணவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைவரும் களத்தில் குதித்துள்ளனர்.
இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் என்.ஆனந்தும், அதிமுக சார்பில் வளர்மதியும், பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாதுரையும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் களத்தில் உள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போட்டியிடும் டிராபிக் ராமசாமி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான காஜாமொய்தீனிடம் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக் என்பவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். சக கல்லூரி மாணவர்கள் சகிதமாக ஊர்வலமாக வந்த அவர், ஸ்ரீங்கம் கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான மனோகரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது தந்தை ராஜ் கொத்தனாராக உள்ளார். திருச்சி பொறியியல் கல்லூரியில் கம்யூட்டர் இன்ஜினியரிங் முடித்த இவர், தற்போது திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார்.

  Source : justknow.in
Post Date : 24-01-15
Total Visitors : 16
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments