Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 5 பேர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதால், இறுதியாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலர் போட்டியிட்டு வென்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுக தனது வேட்பாளரை அறிவித்து, அவரைப் பொது வேட்பாளராகக் கருதி அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரியது.
ஆனால், தேர்தலுக்கு முன்புவரை திமுகவுடன் தோழமை பாராட்டி வந்த விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. அதேநேரத்தில், முஸ்லிம் லீக் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது என முதல் ஆதரவைத் தெரிவித்தார் காதர்மொகிதீன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு "புதிய தமிழகம் ஆதரவளிக்கும்' என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கிடையே, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், செ.கு. தமிழரசனின் குடியரசுக் கட்சியும், உ.தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையும், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு மக்கள் முன்னேற்றக் கழகமும் அறிவித்துள்ளன.
அதிமுக சார்பில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளடக்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களை உள்ளடக்கிய 83 பேரைக் கொண்ட தேர்தல் பணிக்குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் ம. பெரியசாமி, என்.பி.ரவிசங்கர், வெ.இ.க.சிவராஜ், த.சுரேஷ், கொ.வீ.தங்கவேல் ஆகிய 5 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதன்படி, அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என 4 முனைப் போட்டி ஸ்ரீரங்கத்தில் உறுதியாகியிருக்கிறது. இதுகுறித்து தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள இறுதிப் பட்டியல் விபரம் வருமாறு:
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (சின்னங்களுடன்): சீ. வளர்மதி (அதிமுக- இரட்டை இலை), என். ஆனந்த் (திமுக- உதயசூரியன்), எம். சுப்பிரமணியம் (பாஜக- தாமரை), க. அண்ணாதுரை (சிபிஐஎம்- அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்).
வெ. பாண்டியன் (எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம்), ர. ஜேம்ஸ்பால் (ஆதித்தனார் மக்கள் கட்சி), பி. ஹேமநாதன் (ஜனதா தளம்-ஐ). சி. அண்ணாமலை, எம்எஸ். ஆறுமுகம், பி. ஆறுமுகம், ஏ. ஆனந்தன், து. ஆனந்த், பி. ரவி, கேஆர். ராமசாமி என்ற டிராபிக் ராமசாமி, எம். உமர்அலி, இல. கதிரேசன், இரா. கார்த்திக், க. சண்முகம், எம். சந்திரமோகன், செ.ம. சேட்டு, இரா. திருநாவுக்கரசு, கே. பத்மராஜன், சு. பாண்டியன், மு. பால்ராஜ், மா. மன்மதன், எஸ். வளர்மதி, டி. வளர்மதி, ஏ. விஸ்வநாதன், பி.என். ஸ்ரீராமச்சந்திரன்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 322 வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி வாக்காளர் விவரம்: ஆண்கள்- 1,33,020, பெண்கள்- 1,37,096, இதரர்- 13, மொத்தம்- 2,70,129. இவர்களில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்- 9,170, நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்- 4,896.
பஞ்சப்பூரிலுள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

  Source : justknow.in
Post Date : 31-01-15
Total Visitors : 26
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments