Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Neruppuda Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திமுக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனுத்தாக்கல்

திமுக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனுத்தாக்கல்ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என். ஆனந்த், தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வீ. மனோகரனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. அதிமுக வேட்பாளர் சீ. வளர்மதி, மாற்று வேட்பாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர்.
திமுக வேட்பாளர் என். ஆனந்த், திருச்சி- திண்டுக்கல் சாலையில், சோழன் நகரில் உள்ள ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான வீ. மனோகரனிடம் வியாழக்கிழமை முற்பகல் 11.05 மணிக்கு மனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டார்.
ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அந்தநல்லூர் ஒன்றிய திமுக செயலரான பி.கதிர்வேல் தனது மனுவைத் தாக்கல் செய்தார். மனுதாக்கலின்போது, மாவட்ட திமுக செயலர்கள் திருச்சி தெற்கு கே.என்.நேரு, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அமைப்புக் குழு உறுப்பினர் ஹபிபுப் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.51 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து வேட்பாளர் ஆனந்துடன் கே. என்.நேரு, தேர்தல் பணிக்குழுவினர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிக்கு வந்தனர். அங்கு வேட்பாளர் ஆனந்த் தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணிகளை விரைவு படுத்தும் வகையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு திருச்சி வருகிறார். நாளை காலை 9.30 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க பவனம் திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பணி குறித்து பேசுகிறார்.
தொடர்ந்து 25-ம்தேதி முதல் மு.க.ஸ்டாலின் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் தொகுதியில் தங்கியிருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்பாளரையும் களமிறக்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஆனாலும் வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை. ஸ்ரீரங்கத்தில் நான்குமுனைப் போட்டி நிலவுவதால் இடைத்தேர்தல்கள் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

  Source : justknow.in
Post Date : 23-01-15
Total Visitors : 30
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments