Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Saravanan Irukka Bayamaen Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கத்தில் சுமூகமாக தேர்தல் ; ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

ஸ்ரீரங்கத்தில் சுமூகமாக தேர்தல் ; ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆளுங்கட்சியினின் போக்கை கட்டுப்படுத்தி இடைத்தேர்தல், சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் கம்பரசம்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிட் மற்றும் அதிமுக கட்சியினரிடையே ஞாயிற்றுக்கிழமை பகலில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலும் மேற்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவி இழந்ததால்தான் நடைபெறுகிறது. என்பதை உணரவேண்டும். பிரச்சாரம் செய்த சசிகுமாரை அதிமுகவினர் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினரை வெளி மாவட்டத்திலிருந்து ஆளுங்கட்சியினர் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் எதிர்கட்சியினரை தாக்கியும் வருகின்றனர். மாநில தலைமை தேர்தல் அதிகாரியும், தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியின் போக்கை தடுத்து, தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 09-02-15
Total Visitors : 14
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments