Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Kavalai Vendam Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல்ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் 26 வேட்பாளர்களின் முதல் கட்ட செலவு கணக்கை செலவின பார்வையாளரிடம் தாக்கல் செய்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நோக்கங்களுக்காக செய்து வரும் செலவுகளான பொதுக் கூட்டங்கள், சுவரொட்டிகள், தட்டிகள், வண்டி வாகனங்கள், செய்தித் தாள் அல்லது மின்னணு ஊடகத்தின் விளம்பரங்கள் போன்ற பிரசாரம் தொடர்பான செலவுகள் குறித்து தேர்தல் செலவினப் பார்வையாளரிடம் வாக்குப் பதிவிற்கு முன்பு குறிப்பிடப்படும் மூன்று வெவ்வேறு நாட்களில் கணக்கினை உரிய படிவங்களில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டுமென அறிவுரை கூறியுள்ளது.
இதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக 3–வது தளத்தில் இயங்கிவரும் கூட்ட அரங்கில் ஸ்ரீரங்கம் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) இந்திராணி முன்னிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் ஸ்ரீதர் டோராவிடம் முதல் கட்டமாக பிப்ரவரி 1–ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்களில் 26 வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை முதல் கட்டமாக தேர்தல் செலவின பார்வையாளரிடம் நேற்று தாக்கல் செய்தனர்.
இரண்டாம் கட்டமாக வருகிற 5–ந் தேதியும், மூன்றாம் கட்டமாக வருகிற 9–ந் தேதியும் காலை 11 மணியளவில் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்திட வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர் தெரிவித்து உள்ளார்.

  Source : justknow.in
Post Date : 02-02-15
Total Visitors : 28
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments