Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Saithan Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வளர்மதி வேட்பு மனுத்தாக்கல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வளர்மதி வேட்பு மனுத்தாக்கல்தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இது கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் வேட்பு மனுவை தேர்தல் மன்னன் பதமராஜன் 167-வது முறையாக தனது மனுவை தாக்கல் செய்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து 12.35 மணியளவில் அதிமுக வேட்பாளர் வளர்மதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 28-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இம்மாதம் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளான இன்றே அதிமுக சார்பில் வளர்மதி வட்டாட்சியர் காதர் மைதினிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது அவருடன் எம்.பி. பா.குமார், அரசு தலைமை கொரடா மனோகரன், மாநில கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி, மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்னவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 19-01-15
Total Visitors : 58
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments