Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Maaveeran Kittu Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; பாஜக - கம்யூனிஸ்ட் மீது அதிமுக பயங்கர மோதல்; சாலை மறியல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; பாஜக - கம்யூனிஸ்ட் மீது அதிமுக பயங்கர மோதல்; சாலை மறியல்ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க.வினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கல் வீசி தாக்கிக்கொண்டனர். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடக்கும் ஸ்ரீரங்கத்தில் தினமும் ஒவ்வொரு பிரச்சனை விஸ்வருபமெடுத்துக்கொண்டிருப்பதாகவும் வேற்று மாவட்ட நபர்களால் நபர்களால் திருச்சி ஸ்ரீரங்கம் திணறிவருகின்றது என்றும் பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் 13–ந் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் வீதி, வீதியாக வாக்கு கேட்டு வருகின்றனர்.
பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரமணியம் நேற்று காலை ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்திற்கு இருபுறமும் பா.ஜ.க.வினர் சென்று கொண்டிருந்தனர்.
மேலத்தெருவில் பா.ஜனதாவினர் பிரசாரம் செய்ய சென்றபோது, அங்கு ஏற்கனவே அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பா.ஜ.க.வினரும் வந்ததால் அ.தி.மு.க.வினர், அவர்களிடம் இரண்டு விரலை உயர்த்தி இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டனர். அ.தி.மு.க.வினரின் செயலை பா.ஜ.க.வினர் கிண்டல் செய்தனர். அப்போது பா.ஜ.க. பிரசார வாகனத்தின் மைக்கை அ.தி.மு.க.வினர் பிடுங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டனர். இதனால் பா.ஜ.க.வினர் கோபமடைந்து தட்டிக்கேட்டனர்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பார்த்திபன், கோவிந்தன் ஆகியோர் தாக்கப்பட்டனர். இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்து, இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
போலீசார் விரைந்து வந்து இரு கட்சியினரையும் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போதும் கல்வீச்சு நடந்தது. இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. கூடுதல் போலீசார் அங்குவந்து இரு கட்சியினரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளு–முள்ளு ஏற்பட்டது. இதில் சில பெண் போலீசார் சிக்கி தவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். மோதலில் இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் 10–க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் செல்போன் மூலம் பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரமணியத்திடம் பேசி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னரே பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீரங்கம் பகுதியில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை கம்பரசம்பேட்டை பெரியார் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அவர் அ.தி.மு.க.வை விமர்சித்து பேசியதால் அங்கு இருந்த அ.தி.மு.க.வினர் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாதுரை மீது சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். அதனை தடுக்க முயன்ற கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி சசிகுமார் என்பவரை அ.தி.மு.க.வினர் சிலர் தாக்கினர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர்.

  Source : justknow.in
Post Date : 09-02-15
Total Visitors : 15
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments