Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Mega Star Theatre - Trichy Underworld: Blood Wars (3D) (Tamil) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாஜக சார்பில் ஆக்ஸ்போர்டு சுப்ரமணி!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாஜக சார்பில் ஆக்ஸ்போர்டு சுப்ரமணி!ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 13–ந்தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. தரப்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் ஆனந்தும் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க.வினர் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தல் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதால் தி.மு.க.வும் வெற்றி முனைப்புடன் களம் இறங்கி உள்ளது.
இந்த நிலையில் நேரடி களத்தில் அதிமுக-திமுக இடையேயான போட்டி கடுமையாகியுள்ள நிலையில் பாஜகவும், கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் குதித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியை சேர்ந்த அண்ணாதுரை வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் சென்னை கமலாலயத்தில் தற்போது நடந்து வரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருச்சியை சார்ந்த ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனங்களில் தலைவர் சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார்.
இதே சூழ்நிலையில் தே.மு.தி.க.வும் தனது சார்பில் வேட்பாளரை அறிவிக்க தயாராகி வருகிறது. இதனால் தற்போது ஸ்ரீரங்கத்தில் பலமுனை போட்டி உறுதியாகி உள்ளது. பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகளும் குறிப்பிட்ட அளவில் ஓட்டுக்களை பெறும் என்பதால் ஸ்ரீரங்கத்தில் போட்டி கடுமையாகி உள்ளது.

  Source : justknow.in
Post Date : 23-01-15
Total Visitors : 40
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments