Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  சமக தலைவர் சரத்குமார் இன்று முதல் 4 நாட்கள் பிரசாரம்

சமக தலைவர் சரத்குமார் இன்று முதல் 4 நாட்கள் பிரசாரம்சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து இன்று முதல் 10–ந் தேதி வரை 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
இன்று காலை 10.45 மணிக்கு ஸ்ரீரங்கம் சன்னதி வீதியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கிளிக்கூடு, உத்தமர் சீலி, பனையபுரம், திருவளர் சோலை, தாகூர்தெரு, கன்னி மார்தெரு, கீழ்கொண்டையம்பேட்டை, ஒத்த தெரு, சன்னதி வீதி, மேல கொண்டையம் பேட்டை, செக்போஸ்ட், அம்பேத்கார் நகர், நெல்சன் ரோடு, தேவி தியேட்டர், வீரேஸ்வரம் நான்குரோடு, கீதாபுரம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, மேலூர், தெப்பக்குளத்தெரு, மேலவாசல், வடக்கு வாசல், கீழவாசல், தெற்கு வாசல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து மாலை 4.30 மணிக்கு ராஜகோபுரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் தொகுதி தீரன்மாநகரில் தொடங்கி, நாகமங்கலம், சூரக்குடிப்பட்டி, அளுந்தூர், யாகப்புடையான்பட்டி, பள்ளபட்டி, சேதுராப்பட்டி, எரங்குடி, பாத்திமாநகர், துரக்குடி, முடிகண்டம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து இரவு 9 மணிக்கு ஓலையூரில் நிறைவு செய்கிறார்.
9–ந்தேதி (திங்கட்கிழமை) அந்தநல்லூர் ஒன்றியம், கம்பரசம்பேட்டையில் மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, முத்தரச நல்லூர் பஸ் நிலையம், அல்லூர், ஜீயபுரம் கடை வீதி, கொடியாலம்கேட், திருப்பராய்துறை, பெருக மணி, சிறுகமணி, பெட்ட வாய்த்தலை, கருப்பூர், குழு மணி, கோப்பு, எட்டரை, வியாழன்மேடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து இரவு 9.30 மணிக்கு கொய்யாத்தோப்பில் நிறைவு செய்கிறார்4–வது நாளான 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டையில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறார்.
அல்லித்துறை, இனியானூர், தீரன்நகர், புங்கலூர், ராம்ஜிநகர், மெயின் கேட், கள்ளிக்குடி, சோழன் நகர், நவலூர் குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, அம்மா பேட்டை, ஆலம்பட்டி புதூர், இனாம்குளத்தூர் மற்றும், மணப்பாறை ஒன்றியம் சித்தாநத்தம், வடக்கு சேர் பட்டி, கொட்டாம்பட்டி, கரும்புலிப்பட்டி, பெத்தமெட்டுப்பட்டி, முத்தரப்புடையான் பட்டி சமுத்திரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இரவு 9 மணிக்கு மரவனூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

  Source : justknow.in
Post Date : 07-02-15
Total Visitors : 11
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments