Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  +2 பொதுத்தேர்வு தேர்ச்சியில் 12-வது இடத்திலிருந்த திருச்சி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது; தேர்ச்சி 2.6 சதவீதம் குறைவு

+2 பொதுத்தேர்வு தேர்ச்சியில் 12-வது இடத்திலிருந்த  திருச்சி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது; தேர்ச்சி  2.6 சதவீதம் குறைவு+2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றுவெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 92.90 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2.6 சதவீதம் குறைவு.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் +2 அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 244 பள்ளிகளை சேர்ந்த 16,065 மாணவர்கள், 19,151 மாணவிகள் என மொத்தம் 35,216 பேர் எழுதினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டார். இதில் 14,269 மாணவர்கள், 18,446 மாணவிகள் உள்பட 32,715 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,501 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.82. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.32. மொத்தம் தேர்ச்சி 92.90 சதவீதம் ஆகும்.
திருச்சி மாவட்ட தேர்வு முடிவுகளை வெளியிட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் கடந்த ஆண்டு 12-வது இடத்திலிருந்த திருச்சி இந்தாண்டு 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி கடந்தாண்டை விட 2.6 சதவீதம் குறைந்துள்ளது.
தேர்ச்சி குறைவினையடுத்து அடுத்த வாரம் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடக்கிறது. இதில் எந்தெந்த பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது, எந்த பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வு செய்து விவாதிக்கப்படும். மாணவர்கள் பள்ளியில் படிப்பதற்கும், தேர்வு எழுதவும் குறைபாடு உள்ளதாக கூறியுள்ளனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி அதிகம் குறைந்துள்ளது என கண்டறிந்து அந்த பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

  Source : justknow.in
Post Date : 17-05-18
Total Visitors : 119
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments