Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  மகாத்மா-மோடியை புறக்கணிக்கும் விதமான அழைப்பிதழ்; விழாவை புறக்கணித்தார் ரோசய்யா

மகாத்மா-மோடியை புறக்கணிக்கும் விதமான அழைப்பிதழ்; விழாவை புறக்கணித்தார் ரோசய்யாமகாத்மா காந்தியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் புறக்கணிக்கும் விதமான புகைப்படங்களுடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்ததால், குறிப்பிட்ட விழாவை தமிழக ஆளுநர் ரோசய்யா புறக்கணித்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலகலூரிபேட்டையில் ஓர் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரோசய்யா அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், விழாவுக்கான அழைப்பிதழில் ஆளுநர் ரோசய்யாவின் புகைப்படம் பெரிய அளவிலும், அதற்கு கீழே சிறிய அளவில் மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட அந்த விழாவை ஆளுநர் ரோசய்யா புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆளுநர் ரோசய்யா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
விழாவில் பங்கேற்க ஏற்கெனவே சம்மதம் தெரிவித்திருந்தேன். பின்னர், விழா ஏற்பாட்டாளர்கள் அச்சிட்ட அழைப்பிதழில் எனது படம் பெரியதாகவும், மகாத்மா காந்தி, பிரதமர் மோடி மற்றும் சில பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் சிறிய அளவிலும் இடம்பெற்றிருந்ததைக் கண்டேன்.
அப்போதே, மகாத்மா காந்தியின் புகைப்படத்தை அழைப்பிதழின் கீழ்ப் பகுதியில் அச்சிடக் கூடாது என கண்டிப்புடன் அவர்களிடம் கூறிவிட்டேன். இந்நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டபோது, விழா அழைப்பிதழ் குறித்து அங்கிருந்த எனது நண்பர் எனக்கு தெரிவித்தார்.
அழைப்பிதழ் மாற்றப்படாததை அறிந்ததால் அந்த விழாவில் பங்கேற்கும் முடிவை மாற்றிக் கொண்டேன் என ரோசய்யா தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ரோசய்யா மட்டுமே தற்போதும் அப்பதவியில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 08-02-15
Total Visitors : 7
செய்திகள்
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments