Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Maaveeran Kittu Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தமிழகத்தில் மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது - கனிமொழி பிரசாரம்

தமிழகத்தில் மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது - கனிமொழி பிரசாரம்தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என். ஆனந்தை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். மணிகண்டம் என்ற இடத்தில் பிரசாரத்தை தொடங்கிய கனிமொழி, தீரன்மாநகர், நாகமங்கலம், அளுந்தூர், பாத்திமா நகர், சேதுராப்பட்டி, மாத்தூர், சன்னாசி பட்டி, சத்திரப்பட்டி, அரியாவூர், தாயனூர், பள்ளக்காடு, அதவத்தூர், போதாவூர், புலியூர், கொடியாலம், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக முதல்– அமைச்சர் பன்னீர் செல்வம் எங்கே இருக்கிறார்? என்றே தெரியாது. கண்ணீருடன் அவர் பதவி ஏற்றதோடு சரி. முதல் அமைச்சர் அறையில் கூட கால் பதிக்கவில்லை. பதவி ஏற்ற பின்னர் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு தான் வந்திருக்கிறார். மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை பற்றி பேச எந்த நாதியும் இல்லை. இதே போல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன.
எந்த பிரச்சினையிலும் முதல் அமைச்சரோ, அதிகாரிகளோ முடிவு எடுப்பது இல்லை. தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி மக்கள் பிரச்சினைகள் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் உடனுக்குடன் அழைத்து பேசி முடிவு எடுத்தார்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்த பின்னரும் பஸ் கட்டணத்தை குறைக்கவில்லை. இதைப்பற்றி எல்லாம் மக்கள் சிந்திக்கவேண்டும். நடைபெற உள்ள இடைத்தேர்தல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போவது இல்லை. ஆனால் இந்த இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் அமையவேண்டும். எனவே தி.மு.க வேட்பாளர் ஆனந்தை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.
வேட்பாளர் ஆனந்த், மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ சேகரன், முன்னாள் துணைமேயர் அன்பழகன், கிள்ளை ரவி உள்பட பலர் உடன் சென்று இருந்தனர்.

  Source : justknow.in
Post Date : 08-02-15
Total Visitors : 22
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments