Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Jomonte Suviseshangal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை: உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை: உச்சநீதிமன்றம்தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ள உச்சநீதிமன்றத்திடம் தமிழக வழக்கறிஞர்கள் வாதாடியும் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்ற பதில் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடத்தும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு குறித்து தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது.

  Source : justknow.in
Post Date : 12-01-17
Total Visitors : 56
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments