Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - தனுசு எந்த பிரச்சனை வந்தாலும் அதை சரிசெய்து தான் செய்து சரியாக இருக்கும் என நடுநிலையுடன், மனசாட்சிக்கு முக்கியத்துவம் தரும் தனுசுராசி அன்பர்களே!
திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் பொன்னவன், மன்னவன் என எல்லாம் போற்றப்படும் குருவை ஆட்சி வீடாக கொண்ட தனுசுராசி நேயர்களே! இத்தனை நாள் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான சிம்மராசியில் இருந்து தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தார். இப்போது ஸ்ரீ துர்முகி ஆண்டு ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மராசியில் இருந்து கன்னிராசியில் (10-ஆம் இடம்) அமர்கிறார். கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்க இருப்பது நன்மை தான்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரப்பலன்: 10-ஆம் இட குரு பதவியை கெடுப்பார், கவலையும், கலகமும் தருவார். அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. விடாமுயற்சி என்பது ஒருவரை தாழ்வுநிலைக்கு கொண்டு சென்றது கிடையாது. உங்கள் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். 10-ஆம் இட குரு தன்னுடைய வேலையை சின்ன அளவிலேனும் காட்டத்தான் செய்வார். போன வருடம் முழுவதும் நன்மையை வாரி வழங்கினார் அல்லவா! சமுத்திரத்தில் குதித்து கரைகண்ட நீங்கள் குளத்து நீரில் முழ்கிவிடவா போகிறீர்கள். குரு இருக்கும் இடத்தை விட பார்வைக்கு தான் அதிக பலம், எனவே குரு தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் தனம், வாக்கு, குடும்பம் என்ற 2-ஆம் ஸ்தானத்தையும், சுகஸ்தானம் எனும் 4-ஆம் ஸ்தானத்தையும், சத்ரு/ரோகம் எனும் 6-ஆம் ஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்கள் பணத்தட்டுப்பாடு ஏதேனும் ஒரு வகையில் சரிசெய்யப்படும், குடும்பநிலை மேன்படும், சுகஸ்தானம் பலப்படும், வியாதிகள் மட்டுப்படும், எதிரிகளால் ஏற்படும் பிரச்சனையை குரு பார்வை கட்டுப்படுத்தும். இந்த ஒரு வருடம் அனுபவத்தை கொடுத்து வாழ்வில் வழி நடத்துவார். செய்தொழிலில் பாதகம் எதுவும் பெரிய அளவு இருக்காது. வேலை செய்தாலும் பாராட்டு இல்லாத நிலை இதுபோல சில பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஆண்டை வாழ்க்கை படிப்பாக அமைத்துக் கொண்டு செயல்பட்டால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்.

உத்தியோகஸ்தர்கள்: சிலருக்கு பதவியில் இருந்த தனித்தன்மை போய்விடுமோ என்ற பயம் இருக்கும். அந்த அளவிற்கு குரு கெடுதலை செய்ய மாட்டார்.

மாணவர்கள்: யுக்தி, புத்தி, சிந்தனை அனைத்தும் டல்லடிக்கும், படிப்பில் கவனம் தேவை, மனக்கட்டுப்பாடு அவசியம். முயற்சி திருவினையாக்கும் எனும்படி கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள்.

வியாபாரிகள்: அபிவிருத்தி, ஆதாயம் இருந்தாலும் சிக்கலும், குழப்பமும் இருக்கும். செய்யும் தொழிலை கவனமாக செய்யுங்கள், மேற்கொண்டு விருத்தி செய்ய இது சரியான சமயம் கிடையாது.

தொழிலாளர்கள்: தனக்கு மேல் வேலை செய்பவர்கள் கெடுபிடி நடவடிக்கை கொஞ்சம் அதிருப்தி தரும். சோதனை காலம் தான் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டால் வாழ்வில் எதையும் சாதித்து காட்டலாம்.

பெண்கள்: அடுத்தவர்கள் மீது பழிசொல்லும் பழக்கத்தை விட்டுவிடுவது சாலச்சிறந்தது. உங்கள் நலன் மீது கவனம் செலுத்தி பிறருக்கு நன்மை எதையாவது செய்யுங்கள்.

பரிகாரம்: 10-ஆம் இடத்து குருவால் அந்த சிவனே பிச்சை பாத்திரம் கொண்டு திரிந்தார். எனவே ஸ்ரீ முருகனே தினமும் வணங்கிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை திருச்செந்தூரில் தரிசியுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் அடையுங்கள். அங்கு இருக்கும் மேத்தா குருவை வணங்குங்கள். குருஅருள் துணைபுரியும் வாழ்க்கை சிறக்கும்.

  Source : K.M. Nirmala
Post Date : 22-07-16
Total Visitors : 315
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments