Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - மீனம்

குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - மீனம் எல்லோரையும் சமமாக நினைக்கும் தயாளகுணமான நீங்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருந்தாலும் அவ்வப்போது அலைந்து திரிந்து சம்பாதிப்பதில் நாட்டம் கொண்டவர். கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்றவர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்த மீனராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் ஸ்ரீகுருவானவர் உங்கள் ராசிக்கு அதிபதியாகிறார். 6-ல் சிம்மராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குருவானவர் இப்போது உங்கள் ராசிக்கு 7-ல் கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். ஸ்ரீதுர்முகி ஆண்டு ஆடி மாதம் 27-ஆம் தேதி (11-8-2016) ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை குருவானவர் மீனராசிக்கு 6-ல் இருந்து 7-க்கு பெயர்ச்சியாகிறார். கன்னிராசியில் 1-வருடம்/15-நாள்கள் வரை (28-7-2017) அங்கு அவர் சஞ்சரிக்கிறார்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரம்: ஏழாமிட குருவின் சஞ்சாரம் அற்புத வளர்ச்சியை தரும். மாபெரும் மாற்றம் உண்டு. உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் இப்போது ஸ்ரீகுரு பகவான் கன்னிராசியில் இருந்து உங்கள் ராசியை தனது 7-ஆம் பார்வையால் பார்ப்பதால் தனது வீட்டின் வலிமையை அவர் நிச்சயம் கூட்டுவார். குருவானவர் மீனராசிக்கு 7-ல் வருவது ஒரு சூப்பர் அமைப்பு தான், குதூகலம் நிரம்பி வழியும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும், உங்கள் தகுதியும்,மதிப்பும், மரியாதையும் உயரும் உன்னதமான காலம், ஆன்மீகபலம் அதிகரிக்கும். குருதான் இருக்கும் இடத்தில் கொடுக்கும் பலனைவிட குரு பார்வைக்குத் தான் பலம் அதிகம். ஆகவே குரு தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 11-ஆம் ஸ்தானமான லாபத்தையும், 1-ஆம் ஸ்தானமான லக்னத்தையும், 3-ஆம் ஸ்தானமான தைரியஸ்தானத்தையும் பார்ப்பதால் செய்தொழில் லாபம், உடல் ஆரோக்கியம், தைரியமான மனோனிலையையும் தருகிறார். குரு பார்வை கோடி புண்ணீயம் எனும் வார்த்தைக்கு ஏற்ப அவரின் முழுப்பார்வையும் உங்கள் மீனராசி மீது படிவதால் நீங்கள் சுபிச்சமான வாழ்வை பெறப்போகிறீர்கள். தீர்த்த யாத்திரை செல்ல சந்தர்ப்பம் தேடி வரும். கடன்பாக்கி வசூலாகும், எதிரிகள் அஞ்சி ஓடுவார்கள், தொட்டது துலங்கும். இனி எதிலும் சந்தோஷம், மகிழ்ச்சி தான் இதில் சந்தேகமில்லை. மகாலட்சுமி கிருபை உண்டு. தாய், தந்தை வழியில் உதவி கிட்டும். தானம், தருமம் செய்வீர்கள். புதிய வாழ்வு ஆரம்பம்.

உத்தியோகஸ்தர்கள்: முக்கியத்துவம் அதிகரிக்கும், வருமானங்கள் கூடும், இனி வாழ்க்கையில் இருந்த சிரமங்கள், அலைச்சல், திரிச்சல் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். புது வாழ்வு பிறக்கும்.

மாணவர்கள்: கடின உழைப்பு, கவனமாக படித்தால், குரு பார்வையும் கிடைப்பதால் நீங்கள் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும்.

வியாபாரிகள்: வியாபாரம் செழித்து வளரும், லாபகரமான செய்தொழில் அமைந்து வாழ்வை நன்னிலைப்படுத்தும் இது பொன்னான காலம் இதை சரியாக பயன்படுத்தி உங்கள் நிலையை மேன்படுத்துங்கள்.

பெண்கள்: வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரியும், தோற்றத்தில் வசீகரம் இருக்கும், உள்ளத்தில் அமைதி பிறக்கும், முகம் பிரகாசிக்கும்.

தொழிலாளர்கள்: ஊக்கம் உங்கள் உழைப்பு இப்போது தான் பலன் தரும். அதிக உழைப்பை சரியான வகையில் போட்டு முயற்சி செய்தால் இனிமேல் நல்ல முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் அடையப்போகிறீர்கள்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திட்டை ஸ்ரீராஜ குருவை அவரின் தினமான வியாழக்கிழமை தரிசித்தால் வாழ்வில் இருந்த தடை விலகி நல்ல வழி பிறக்கும். படிப்பு இல்லாத குழந்தையின் கல்விக்கு உதவி செய்யுங்கள்.

  Source : K.M. Nirmala
Post Date : 25-07-16
Total Visitors : 322
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments