Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - மகரம் தன் தகுதியை உணர்ந்து வாழ்க்கை நடத்தி எடுத்த காரியத்தை ஊண், உறக்கம் இல்லாமல் கடுமையாக உழைத்தாலும், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை வந்துவிடுவதாலும் செய்தொழில் அமைதியின்மையும் இருந்தாலும் வாழ்வில் தன்னம்பிக்கையுடன் விடாபிடியாக முன்னேற துடிக்கும் மகரராசி அன்பர்களே!
திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் ஆயுள்காரகன் என சொல்லக்கூடிய ஸ்ரீ சனிபகவானை ஆட்சி வீடாக கொண்ட மகரராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 8-ஆம் இடத்தில் (சிம்ம ராசியில்) இருந்த குருவானவர் ஸ்ரீதுர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்டு மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் அடிஎடுத்து வைக்கிறார். அங்கு அவர் சஞ்சாரம் 1-வருடம்/15-நாள்கள் வரை (28/7/2017) அங்கு இருப்பார். உங்கள் ராசிக்கு 9-ஆம் இடம் பாக்கியஸ்தானம் எனவே நீங்கள் வாழ்வில் கொடிகட்டி பறக்கப்போகிறீர்கள்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரப்பலன்: 9-ஆம் இடத்து குருவால் வாழ்வு கோபுரம் போல் உயரும், பிரமிக்கும் யோகப்பலன்களால் வசந்தகாலம் நோக்கி பயணம் செய்ய இருக்கிறீர்கள். 5-ஆம் ஸ்தானத்தை, 9-ஆம் ஸ்தானத்தை மிஞ்சி பலன் தரும் ஸ்தானம் என்பது கிடையாது. 9-ஆம் இடம் என்பது குருவுக்கு ராஜசிம்மாசனம். ஓடிப்போனவனுக்கு 9-ல் குரு என்பதற்கு ஏற்ப குரு உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார். ஜெனன ஜாதகமும் சிறப்பாக இருந்தால் நீங்கள் கோபுர உச்சிக்கே செல்வதை யாராலும் தடுக்க முடியாது. குருதான் இருக்கும் இடத்தைவிட தன் பார்வைக்கு தான் அதிக விசேஷ பலன். எனவே இவர் தனது 5-7-9-ஆம் பார்வை மூலம் உங்கள் 1-ஆம் இடமான லக்ன ஸ்தானத்தையும், 3-ஆம் இடமான தைரிய ஸ்தானத்தையும், 5-ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்தையும் பார்த்து அந்த இடத்தின் வலிமையை கூட்டுகிறார். எனவே தைரியமாக எந்த முடிவையும் எடுக்கலாம்,ஆரோக்கியம் சிறக்கும், பொதுவாக மன்னவன், பொன்னவன் என அழைக்கப்படும் ஸ்ரீகுருவானவர் பாக்கியஸ்தானத்தில் வரும்போது வாழ்க்கையில் பணப்பிரச்சனை என்ற பேச்சிற்கே இடம் கிடையாது, லட்சுமி கடாட்சம் கொழிக்கும். யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது இடத்துக்கு போகப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்: ஒரு மாதிரியாக பேசியவர்கள் எல்லாம் தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வார்கள். பேச்சில் மட்டும் நிதானம் தேவை.

மாணவர்கள்: கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் உயர் படிப்பு, தொழில் படிப்புக்கு தேர்வு ஆவார்கள்.

வியாபாரிகள்: இனிமேல் நல்ல யோகமான காலம்தான். தொட்டது ஜெயம் தான். லாபகரமான வருமானத்தை பெறப் போகிறீர்கள். வாழ்க்கையில் இனி எல்லாம் முன்னேற்றம் தான்.

தொழிலாளர்கள்: பட்டபாடு எல்லாம் காணாமல் போகும், பட்டபாட்டிற்கு கைமேல் பலன்கிட்டும். நல்ல காலம் இருக்கும் போது அதை நல்லவழியில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.

பெண்கள்: உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும் யோககரமான காலம் ஆரம்பம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் நேரம் இது.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமை தரிசியுங்கள். பார்வை இழந்தவருக்கு உதவி செய்யுங்கள் உங்கள் பலம் கூடும்.

  Source : K.M. Nirmala
Post Date : 23-07-16
Total Visitors : 233
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments