Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - துலாம்

குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - துலாம் இனிமையாக பேசி அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்து மனதில் நினைப்பதை சொல்லாமல் நடுநிலையுடன் செயல் செய்ய விரும்பும் பேரன்புள்ள துலாம்ராசி அன்பர்களே!
திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் எனப்படும் சுக்கிரபகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாகிறார். இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது ஸ்ரீ துர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 12-ஆம் இடமான அயன/சயன ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் 1-வருடம்/15-நாள்கள் (28/7/2017) வரை அங்கு அவர் சஞ்சாரம் செய்கிறார்.

ஸ்ரீ குரு பகவான் சஞ்சாரம்: 12-ஆம் இடத்து குருவால் விரயங்கள்,குழப்பம், குதர்க்கம் மேலோங்கும். பொன்னவன் குரு தன் பார்வையால் அதிர்ஷ்ட கரமான நன்மைகள் அதிகரிக்கும். இதுவரை 11-ஆம் இடத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை கொடுத்த குருபகவான் இப்போது விரயத்தில் அடி எடுத்து வைக்கிறார் என குழப்பம் அடையாதீர்கள். இன்ப, துன்பம் கலந்துதான் வரும் போன வருடம் முழுவதும் நன்மையை கொடுத்தவர் எனவே குருவானவர் எந்த ராசிக்கும் அதிக கெடுதல் கொடுத்தது கிடையாது. குருவானவர் தான் இருக்கும் இடத்தை காட்டிலும் பார்வைக்கு தான் அதிக பலம். எனவே நீங்கள் இப்போது பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. குரு தனது 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 4-ஆம் ஸ்தானமான சுகஸ்தானத்தையும், 6-ஆம் ஸ்தானமான ரோக/சத்ரு ஸ்தானத்தையும், 8-ஆம் ஸ்தானமான ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார், இதனால் வீடு, மனை, வண்டி, வாகனம், ஆயுள் விருத்தியும், சத்ருக்கள் நசமும், ஆயுள் பலம் கூடும். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆகவே 12-ஆம் இடம் விரயம் என்பதால் வரவு/செலவு கணக்கை சரியாக செய்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உத்தியோகஸ்தர்கள்: வேலையில் அதிருப்தி ஏற்படும், அலைக்கழிப்பும், அல்லும், ஆதாயத் தட்டுப்பாடு, கீழ்நிலை ஊழியர்களால் உங்கள் வேலை பாதிக்கும் எனவே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.

மாணவர்கள்: கல்வியில் முழுகவனம் தேவை. புத்தி, சக்தி, யுக்தி எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு முன்னேற்றமும், சிந்தனையில் தெளிவும், உள்ளத்தில் உற்சாகமும் அதிகரிக்கும்.

வியாபாரிகள்: நல்ல நிலையில் இருக்கும். ஆனால் அனுபவம் இல்லாத வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் கால்ளை விட வேண்டாம்.

தொழிலாளர்கள்: பாடுபடுவதில் சிரம்மம் இருந்தாலும் கடின உழைப்பு நல்ல பலனைத்தரும் என்பதற்கு ஏற்ப ஏற்ற ஊதியமும், சலுகையும் கிடைக்கும். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.

பெண்கள்: கையில் இருக்கும் பணம் கரையும், வரவைவிட செலவு அதிகரிக்கும். இதை தவிர்க்க கவனம் தேவை. குடும்பத்தேவையை பார்த்து செய்யுங்கள், வாழ்வில் சிறப்பு அடைவீர்கள்.

பரிகாரம்: திருச்சிக்கு அருகில் இருக்கும் திருப்பட்டூர் எனும் ஸ்தலத்தில் இருக்கும் ஈஸ்வரனையும், பிரம்மாவையும் தரிசித்து அங்குள்ள ஞானகுருவான பதஞ்சலி மாமுனிவரின் அருளாசியை அடைந்து வாழ்வில் நன்மை அடையுங்கள்.

  Source : K.M. Nirmala
Post Date : 20-07-16
Total Visitors : 259
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments