Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் (11.08.2016 முதல் 28.07.2017 வரை) - விருச்சிகம் நட்புக்கும், உறவுக்கும் முதலிடம் கொடுத்து எதுவந்தாலும் முடியாது என்ற வார்த்தையை தவிர்த்து காரியத்தை சாதித்துக் காட்டக்கூடிய உழைப்பில் நம்பிக்கை மிக்க, தனக்கென தனிப்பாதை அமைத்து செயலில் ஜெயம் அடையும் விருச்சிகராசி அன்பர்களே! திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் தைரியகாரகன், பலம் வாய்ந்தவன் எனப்படும் ஸ்ரீ செவ்வாய் பகவானின் வீட்டை ராசியாக கொண்ட விருச்சிகராசி நேயர்களே! இத்தனை நாள் ஸ்ரீகுரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ஆம் ஸ்தானத்தில் அமர்ந்து (சிம்மத்தில்) தடைகள் பல ஏற்படுத்தினார். இனி அவர் சிம்மராசியில் இருந்து இடம் பெயர்ந்து உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான கன்னிராசிக்கு வருகிறார். ஸ்ரீதுர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமையில் கன்னிராசிக்கு வருகிறார். இவர் கன்னிராசியில் 1-வருடம்/15-நாள்கள் (28-7-2017) வரை அங்கு இவர் சஞ்சாரம் இருக்கிறது.

ஸ்ரீ குரு பகவான் சஞ்சாரம்: மன்னவன், பொன்னவன் எனப்போற்றப்படும் குருவானவர் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான கன்னிராசியில் வருவது மிகவும் சிறப்பு. லாபகுருவாலே தனவரவு பெருகும், லட்சியம் கைகூடும், பேரும், புகழும் வந்து சேரும், பிரபல யோகமும் வந்தே தீரும். யோகசாலியான நீங்கள் இந்த வருடத்தை ஒரு பொற்காலம் எனதான் சொல்ல வேண்டும். மாபெரும் மாற்றம் கிடைக்கும். நினைத்தது எல்லாம் நடக்கும். குருபலத்தால் வருமான, வசதிவாய்ப்புகள் அதிகரிக்கும், சுபகாரியம் ஜாம், ஜாம் என நடக்கும். தனகாரகனும் பஞ்சமஸ்தானதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில் இருப்பது அனைத்து விதத்திலும் நன்மையை கொடுக்கும். குரு தனக்கு உகந்த ஸ்தானத்திற்கு வந்து இருக்கிறார். இது 12-ஆண்டுக்கு ஒரு தடவை நிகழக்கூடிய நிகழ்ச்சி ஆகும். கவலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு காரிய மாற்ற புறப்படுங்கள். ஜீவனத்தில் இருந்த இடையூரு சரியாகிவிடும். லட்சுமிகடாட்சம் மெல்ல மெல்ல உங்கள் பக்கம் வீச ஆரம்பிக்கும். மேலும் ஸ்ரீ சனீஸ்வரபகவான் உங்கள் ராசியில் இருந்து இன்னும் 6-மாதத்தில் அடுத்த ராசிக்கு பெயர்வதால், ஜென்ம சனி விலகி மேலும் நன்மையை அடையப் போகிறீர்கள். குருவானவர் தன் 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் ராசியின் 3-ஆம் ஸ்தானமான தைரியஸ்தானத்தையும், 5-ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்தையும், 7-ஆம் இடமான களஸ்திர ஸ்தானத்தையும் பார்ப்பதால் அந்த இடங்கள் மேலும் வலிமை அடைகின்றது. இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை, தைரியம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், குடும்பத்தில் இனி திருவிழா கோலம்தான். இதுவரை இருந்த கெட்டபலன் விலகி யோகப்பலன்கள் சந்தோக்ஷம் தரும் வகையில் அமைந்திடும்.

உத்தியோகஸ்தர்கள்: இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள், தொந்தரவுகள் நீங்கிவிடும். நல்ல சூழ்நிலை உருவாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.

மாணவர்கள்: பிறர் ஆச்சர்யப்படும் அளவுக்கு புத்திசதுர்யத்தை காட்டுவீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரிகள்: வருமானம் அதிகரிக்கும், வியாபாரத்தில் அதிக அபிவிருத்தி உண்டாகும். வாழ்க்கைத் தரத்திலும் உயர்வான நிலை உண்டாகும்.

தொழிலாளர்கள்: கடும் பாடுபட்டு வந்த உங்கள் நிலைமையில் மாற்றம் ஏற்படும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற காலம் இதுதான் இந்த ஆண்டை நல்லபடி பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.

பெண்கள்: பணத்தட்டுப்பாடு விலகி அதிகபடியான சொகுசான சுகசௌகர்யங்கள் செய்யும் அளவுக்கு குடும்பத்தில் சந்தோக்ஷம் நிலைக்கும்.

பரிகாரம்: செவ்வாயிற்கு அதிபதியான ஸ்ரீமுருகப்பெருமானை அதாவது குருவிற்கு குருவான அந்த திருச்செந்தூர்முருகனை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் உயர்வு தானாக வந்து சேரும். முதியோர் இல்லத்தில் உள்ள வயதானவர்க்கு உதவி செய்யுங்கள்.

  Source : K.M. Nirmala
Post Date : 21-07-16
Total Visitors : 307
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments