தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்கை (EPF) ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி தடைபட்டுள்ளதால், உறுப் பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள இருப்புத் தொகையை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் பல்வகை சட்டம் 1952-ன் படி, தொழி லாளர்களிடம் இருந்து மாதந் தோறும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்புநிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் வழங்குகிறது. இந்த தொகைக்கு குறிப்பிட்ட அளவு வட்டி வழங்கப் படுகிறது.
திருமணம், வீடு கட்டுதல், மருத்துவச் செலவு போன்ற வற்றுக்கு இத்தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஊழியர்கள் கடனாகப் பெறமுடியும். ஓய்வு பெறும்போது மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த நிதியில் இருந்து அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் எவ்வளவு பணம் இருக் கிறது என்பதை ஆன்லைன் மூலம் அறியும் வசதி 2011-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது. www.epfochennai.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று வைப்புநிதி கணக்கு எண், செல்போன் எண்ணை பதிவு செய்தால், வைப்புநிதி இருப்பு விவரம் உடனடியாக எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். தொழிலாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆன்லைன் சேவை தடைபட்டுள்ளது. இதனால், உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள இருப்பு நிலவரத்தை அறிந்துகொள்ள முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
Invite People To Here