Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Kavalai Vendam Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு; இடைத்தேர்தல் தொடர்பான புகாரை இணையதளத்தில் தெரிவிக்க அழைப்பு

நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு; இடைத்தேர்தல் தொடர்பான புகாரை இணையதளத்தில் தெரிவிக்க அழைப்புஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது அனைத்து வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொதுப்பார்வையாளர் பால்கார்சிங் தலைமையேற்று பேசுகையில், ‘‘ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவினை கண்காணிக்க ரெயில்வே துறையை சேர்ந்த 180 பணியாளர்களும், வங்கி பணியாளர்கள் 215 பேரும் என மொத்தம் 395 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு மாதிரி வாக்குப்பதிவினை நடத்திட வேண்டும். ஒரு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற ஒரு முகவரை மட்டுமே வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும். மதியம் 3 மணிக்கு மேல் வாக்குப்பதிவு முடியும் வரை முகவர் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றினை வாக்காளரிடம் பெற்று சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தங்களது அறிக்கையை பொது பார்வையாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் http//:www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் இதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் சென்றால், எந்தெந்த வகையான புகார்களைப் பதிவு செய்யலாம் என்ற பட விளக்கத்துடனான தகவல்கள் அடங்கிய தளத்துக்குச் செல்லலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்கும் விதி மீறல் பற்றி புகார் பதிவு செய்ய வேண்டுமென்றால், பணத்தை வாங்கும் கையின் படம் ஒரு வட்டத்துக்குள் காட்டப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து சம்பந்தப்பட்ட புகாரைப் பதிவு செய்யலாம். அதோடு, இது தொடர்பான புகைப்படம், விடியோ ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்யலாம். புகார்தாரரின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பயிற்சி வகுப்பில் முன்னோடி வங்கி மேலாளர் பிரபாகரன், மகளிர் திட்ட அலுவலர் கோமகன், உதவி திட்ட அலுவலர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

  Source : justknow.in
Post Date : 08-02-15
Total Visitors : 19
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments