Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Dunkirk Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  திருச்சியில் கனிமொழி பிரசாரம்

திருச்சியில் கனிமொழி பிரசாரம்ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு ஆதரவாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று ஸ்ரீரங்கத்தில் வாக்கு சேகரிக்கிறார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி இன்று திருச்சியில் பிரச்சாரம் செய்கின்றார்.
இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து கார் மூலம் நள்ளிரவு திருச்சி வந்தடைந்தார். இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு தஞ்சை நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுக்க சென்றிருக்கும் கனிமொழி மாலை 4 மணிக்கு மணிகண்டம் யூனியன் அலுவலகத்தில் இருந்து தனது பிரச்சார பயணத்தை துவக்குகின்றார்.
இரவு 8 மணிக்கு அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட, முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை பகுதியிலும், இரவு 9.30 மணிக்கு ஸ்ரீரங்கம் பகுதியிலும் திமுக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருக்கின்றார்.

  Source : justknow.in
Post Date : 07-02-15
Total Visitors : 15
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments