Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Achamindri Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; வரும் 24-ம் தேதி ஸ்டாலின் பிரசாரம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்; வரும் 24-ம் தேதி ஸ்டாலின் பிரசாரம்ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இது கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் வேட்பு மனுவை தேர்தல் மன்னன் பதமராஜன் 167-வது முறையாக தனது மனுவை தாக்கல் செய்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வளர்மதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 28-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இம்மாதம் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
அதிமுக இன்றே தனது தேர்தல் பிரசாரத்தை வேட்பு மனுத்தாக்கலுடன் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து வேட்பாளர் வளர்மதி உற்சாக மிகுதியுடன் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளார். அவருக்கு துணையாக தமிழக அமைச்சர்கள் பலரும் களத்தில் குதித்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பாளரை அறிவித்த திமுக வரும் 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தேசித்திருப்பதாக தெரிகின்றது. அதனையடுத்த சில நாட்களில் ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் என்.ஆனந்த் என்பவரை ஆதரித்து ஜனவரி 24-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் வர உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை திமுக முக்கியமானதாகக் கருதுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் அல்லது வாக்கு வித்தியாசம் அதிகம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதைவிட 3-ம் இடத்திற்கு திமுக தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரையும் அதற்கேற்றவாறு தேர்தல் வேலைகள் திறம்பட செய்யப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் திமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை ஜனவரி 24-ம் தேதி காலை 9.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதன்பின், ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். தேர்தல் பிரசார யுக்தி, தேர்தலில் திமுகவினரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

  Source : justknow.in
Post Date : 19-01-15
Total Visitors : 14
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments