Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Star Theatre - Trichy Kadhal Kasakuthaiya Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நாட்டின் விஞ்ஞான ரீதியிலான முன்னேற்றத்திற்கு எப்போதுமே வைகோ தடையாக இருக்கிறார் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

நாட்டின் விஞ்ஞான ரீதியிலான முன்னேற்றத்திற்கு எப்போதுமே வைகோ தடையாக இருக்கிறார் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியின் மாமன்ற உறுப்பினர் தனபால் இல்லவிழாவிற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் முடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் வாகனங்களில் கொடிக்கட்டி வலம் வருகின்றனர். ஆனால் மற்றவர்கள் புதுக்கோட்டைக்கு அருகே வரும்போதே கொடியை அகற்ற சொல்கின்றனர். இது அனைவருக்கும் சமமான தேர்தல் இல்லை.
திருச்சியில் உள்ள தேர்தல் பார்வையாளர்களுக்கு சம்பளம், படிக்காசு உள்ளிட்டவைகளை வீட்டுக்கே அனுப்பி வைத்து விடலாம். தேர்தல் ஆணையம் ஸ்ரீரங்கத்திற்கு வந்தும் கூட எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ஜீயபுரம் அக்ரஹாரம் பகுதியில் வேட்டி சேலைகளை அ.தி.மு.க.வினர் வழங்கியுள்ளனர். அங்கு பா.ஜ.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மட்டுமே நேரடி போட்டி உள்ளது. இது, முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இல்லை.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் 1967-ல் இருந்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளி வைத்துள்ளன. 4 லட்சம் கோடி கடனை சேர்ந்து வைத்துள்ளனர். கருவில் இருந்து பிறக்கும் குழந்தையின் தலையில் 58 ஆயிரம் ரூபாய் கடன் சுமையுள்ளது. பா.ஜ.க.வினால் மட்டுமே மேம்பாட்டைக் கொண்டுவர முடியும் என்கின்ற அச்சம் தமிழக கட்சிகளுக்கு உள்ளது.
விஞ்ஞான ரீதியிலான முன்னேற்றத்திற்கு எப்போதுமே வைகோ தடையாக இருந்து வருவது வழக்கம். அதனால் வைகோவின் கருத்துகளுக்கு நாம் செவிசாய்க வேண்டியதில்லை. மத்தியிலுள்ள பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் யார் வருவதாக இருந்தாலும் பா.ஜ.க.வின் அடிப்படை கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கூட்டணிக்கு வரமுடியும், மற்றவர்கள் வர வேண்டாம்.
டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெறும்'' என்றார். இதையடுத்து, 'நாங்கள் இந்துக்கள் அல்ல. ஆதி தமிழர்கள். சூரியனை வழிபடுபவர்கள் என இந்து மதத்தை விட்ட வெளியேறுகிறோம். எங்களது மதம் தமிழம்' என சீமோன் கூறியதுபற்றி கேட்டபோது, ஆதி தமிழர்கள் அம்மணமாக திரிந்தார்கள். அதேபோல் சீமான் திரிவாரா? இது நடைமுறைக்கு ஒவ்வாத பேச்சு என்றார்.

  Source : justknow.in
Post Date : 08-02-15
Total Visitors : 26
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments