Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்புபிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், திட்டக் கமிஷனை கலைத்து விட்டு அதற்கு பதிலாக புதிய அமைப்பு அமைக்கப்படும் என மோடி அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் திட்டக் கமிஷனுக்கு பதிலாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கவர்னர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை திருச்சியில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களப்பணி ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பணி தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடம் கலந்தாலோசித்து விட்டு மதியம் விமானம் மூலம் சென்னை சென்ற அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன், மாநில நிதித்துறைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோரும் சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச, அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், 2015-16 நிதியாண்டுக்கான பட்ஜெட் 28-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தற்போது நடந்து வரும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

  Source : justknow.in
Post Date : 08-02-15
Total Visitors : 7
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments